நடுத்தர வருமானத்தைக் கொண்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு "நடுத்தர வகுப்பு மானியத் திட்டம்" (Middle Class Subsidy Program) என்று பெயரிடப்பட்டுள்ளது. பெயரிலேயே, நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்கான திட்டம் என்பது தெரிகிரது. கடன் தொடர்பான இந்த மானியத் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு என்ன பயன், அதற்கான தகுதிகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
நடுத்தர வகுப்பு மானியத் திட்டம் என்றால் என்ன?
நடுத்தர வர்க்க மானியத் திட்டம் (Credit Link Subsidy Scheme (CLSS) for EWS/LIG under Pradhan Mantri Awas Yojana (PMAY)) என்பது பல அத்தியாவசிய சேவைகள் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய கடன் தொடர்பான மானியத் திட்டம் ஆகும். ஏழைகள், பொருளாதார நிலையில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
கல்வி மானியம்
இந்தத் திட்டத்திற்கு கீழ் நடுத்தர குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு மானியம் பெற முடியும்,இதில் பள்ளி கட்டணம் பாட புத்தகங்கள் மற்றும் கல்வி தொடர்பான அனைத்து அம்சங்களும் அடங்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி நிறுவனங்களில் பதிவு செய்து அரசு போர்டல் மூலம் மானியத்திற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவத்திற்கு மானியம்
இந்த திட்டம் மருத்துவ செலவுகளுக்கான நிதி உதவியை வழங்குகிறது, இதில் மருத்துவமனை கட்டணங்கள் அறுவை சிகிச்சைக்கு உதவி கிடைக்கும். மேலும், மருந்துகள் வாங்குவதற்கு சிறிய சிறிய உடல் உபாதைகளுக்கும் மானியம் பெறலாம். அரசாங்கத்தின் சுகாதார பாதுகாப்பு இணையதளம் மூலம் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வீடு தொடர்பான மானியம்
வீடுகளை வாங்க அல்லது புதுப்பிக்க விரும்பும் நடுத்தர குடும்பங்கள் வீட்டு மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டுமானம் அல்லது புதுப்பித்தல் ஆகும் செலவுகளின் ஒரு பகுதியை ஈடுகட்ட அரசாங்கம் நிதி உதவி வழங்குகிறது.
இந்த மானியத்தை பெற சில தகுதி நிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அந்த தகுதிகள் இருந்தால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும்.
அதிகபட்ச வட்டி மானியம் ரூ. 2.67 இலட்சம் என்று அரசு அறிவித்துள்ளது. LIG குடும்பத்தை சேர்ந்தவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3-6 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். அதேபோல, குடும்ப வருமானம் 3 இலட்சத்திற்கு குறைவாக இருக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தின் (EWS) வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும்.
வட்டி விகிதம் (ROI)
6.50% என்ற வட்டிக்கு கடன் கொடுக்கப்படும். அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் - 30 ஆண்டுகள் வரை இருக்கும் என்றாலும், வட்டி மானியம் கடனின் ஆரம்ப 20 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மானியம் பெற நிபந்தனைகள்
பயனாளி குடும்பத்தில் கணவன், மனைவி, திருமணமாகாத மகன் மற்றும்/அல்லது திருமணமாகாத மகள் ஆகியோர் இருப்பார்கள். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, இதற்கு முன்னதாக வீடு இந்தியாவில் வேறு எங்கும் இருக்கக்கூடாது.
மேலும் படிக்க | மிடில் கிளாஸ் மக்களுக்கு கொண்டாட்டம்: நடுத்தர வகுப்பு மானியத் திட்டம் மூலம் அனைத்திற்கும் சப்சிடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ