இந்த வங்கியில் FD கணக்கு இருந்த உங்களுக்கு குட் நியூஸ்: வட்டி விகிதத்தில் பெரிய ஏற்றம்

ICICI Bank Interest Rates: வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 6, 2024, அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 6, 2024, 02:34 PM IST
  • வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளன.
  • மிகக்குறைந்த வட்டி 3 சதவீதம்.
  • இந்த கால அளவுகளுக்கு 5.75 சதவீத வட்டி கிடைக்கும்.
இந்த வங்கியில் FD கணக்கு இருந்த உங்களுக்கு குட் நியூஸ்: வட்டி விகிதத்தில் பெரிய ஏற்றம் title=

ICICI Bank Interest Rates: ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) தனது எஃப்டி விகிதங்களில் திருத்தம் செய்து அவற்றை உயர்த்தியுள்ளது. வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 6, 2024, அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ரூ. 3 கோடி வரையிலான எஃப்டிகளுக்கு பொருந்தும். வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் (Fixed Deposit) வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதம் வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி 7.80 சதவீதமாக உள்ளது. இந்தக் காலக்கட்டத்திற்கு மட்டுமே வங்கி அதிக வட்டியை வழங்குகிறது. 

மிகக்குறைந்த வட்டி 3 சதவீதம்

- ஐசிஐசிஐ வங்கி 7-29 நாட்கள்ளுக்காக FD -க்கு 3 சதவீத வட்டி அளிக்கிறது. 
- 30-45 நாட்களுக்கான FD -க்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- 46-60 நாட்களில் முதிர்ச்சியடையும் FD -க்கு 4.25 சதவீதம் வட்டி கிடைக்கிறது.

இந்த கால அளவுகளுக்கு 5.75 சதவீத வட்டி கிடைக்கும்

- 61-90 நாட்களுக்கான FD -க்கு 4.5 சதவிகிதம் வட்டி வருமானம் கிடைக்கும். 
- 91-184 நாட்களுக்கு FD இல் முதலீடு செய்தால், 4.75 சதவிகிதம் வட்டி கிடைக்கும். 
- 185-270 நாட்களுக்கான FD -க்கு வங்கி 5.75 சதவீத வட்டியை வழங்குகிறது. 

மேலும் படிக்க | Minimum Balance இல்லையென்றால் வங்கிகள் அபராதம் செலுத்த முடியுமா? RBI விதிகள் கூறுவது என்ன?

271 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான FD =களுக்கு 6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான காலவரையிலான FD -களுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளன

- 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கான கால அளவிற்கு FD -யில் முதலீடு செய்தால், அதிகபட்சமாக 7.25 சதவீதம் வட்டி கிடைக்கும். 
- 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான கால அளவிற்கும் FD வட்டி விகிதத்தை  7.25 சதவீதமாக வங்கி உயர்த்தியுள்ளது. 
- இந்தக் காலகட்டங்களுக்கு மட்டும் வங்கி விகிதங்களை 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

2-10 ஆண்டுகளுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD -களுக்கு ஐசிஐசிஐ வங்கி 7 சதவீத வட்டி அளிக்கிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD -களுக்கு வங்கி 6.9 சதவீத வட்டியை வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கு 0.55 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்

மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை டெபாசிட் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு (FD) வங்கி 0.55 சதவிகிதம் கூடுதல் வட்டியை அளிக்கிறது. இந்த வட்டி விகிதம் ரூ. 3 கோடிக்கும் குறைவான FD களுக்கானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

(பொறுப்பு துறப்பு: இந்த செய்தி பொதுவான தகவல்களை வழங்க எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.)

மேலும் படிக்க | ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News