விமானத்தில் இனி செல்லப்பிராணிகளுடன் பயணிக்கலாம்: ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு

Akasa Air:  ஆகாசா ஏர், செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இனிமேல் உங்கள் செல்லப்பிராணியையும் விமானத்தில் அழைத்துச் செல்லலாம்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 6, 2022, 06:28 PM IST
  • செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விமான பயணிகளுக்கு பெரும் நிம்மதி.
  • இனி உங்கள் செல்லப்பிராணியையும் விமானத்தில் அழைத்துச் செல்லலாம்.
  • நாய்கள் மற்றும் பூனைகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்: ஆகாசா ஏர்
விமானத்தில் இனி செல்லப்பிராணிகளுடன் பயணிக்கலாம்: ஆகாசா ஏர் நிறுவனம் அறிவிப்பு title=

ஆகாசா ஏர் அப்டேட்: விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் உள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கிய ஆகாசா ஏர், செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இனிமேல் உங்கள் செல்லப்பிராணியையும் விமானத்தில் அழைத்துச் செல்லலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது விமான பயணிகளுக்கு மிகப் பெரிய நிவாரணம் அளிக்கும் செய்தியாக வந்துள்ளது.

நாய்கள் மற்றும் பூனைகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்

நவம்பர் முதல், விமான பயணத்தின் போது பயணிகளுக்கு நாய்கள் மற்றும் பூனைகளை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும். இதனுடன், நவம்பர் முதல் சரக்கு சேவையையும் நிறுவனம் தொடங்கும். மேலும், வரும் வாரங்களில் புதிய வழித்தடங்கள் இயக்கப்படும்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தகவல் அளித்தார்

ஆகாசா ஏர் நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சர்வதேச சேவைகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்திடம் 20 விமானஙளுக்கான தொகுப்பு வந்த பிறகு இந்த சேவைகள் தொடங்கப்படும். ஆகாசா ஏர் விமான சேவையின் செயல்பாடுகள் துவங்கிய முதல் 60 நாட்களில் திருப்திகரமாக இருந்துள்ளது. இந்த தகவலை விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) வினய் துபே தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் செயல்படத் தொடங்கியது

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விமான சேவை தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் சர்வதேச செயல்பாடுகளை தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவனம் தனது கடற்படையில் ஆறு விமானங்களைக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மொத்தம் 18 விமானங்களாக அளவை அதிகரிக்க உள்ளது. நிறுவனம் புதிய முதலீட்டாளர்களையும் நாடுகிறது. தங்களது இயக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | புதிய கணக்கீட்டின் மூலம் இபிஎஸ் ஓய்வூதியம் பன்மடங்கு உயரும் 

திட்டமிட்டபடி விமான நிறுவனம் இயங்குகிறது

திட்டமிட்டபடி விமான நிறுவனம் இயங்கி வருவதாகவும் அவர் கூறினார். இந்நிறுவனம் தற்போது தினமும் 30 விமானங்களை இயக்கி வருகிறது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) முதல் டெல்லியில் இருந்து சேவைகள் தொடங்கும். ஆகாசா ஏர் நிறுவனம் 72 போயிங்-737 மேக்ஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இது தவிர, பயணிகள் செல்லப்பிராணிகளை (நாய், பூனை) உடன் அழைத்துச் செல்ல நிறுவனம் விரைவில் அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகாசா ஏர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியும் செயலுத்தி அதிகாரியுமான பெல்சன் குடின்ஹோ, பயணிகள் நவம்பர் முதல் செல்லப்பிராணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். இதற்கான முன்பதிவு அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்கும். செல்ல பிராணிகள் தனித்தனியாக கூண்டுகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். கூண்டு உட்பட எடை வரம்பு கேபினில் ஏழு கிலோவாகவும், செக்-இன் செய்யும்போது 32 கிலோவாகவும் இருக்கும். எடை அதிகமான செல்லப்பிராணிகளுக்கு மற்றொரு ஆப்ஷன் இருக்கும்.

ஜுன்ஜுன்வாலா கூறியபடி பணிகள் நடைபெற்று வருகின்றன

நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மரணத்திற்குப் பிறகு நிறுவனத்தின் மூலோபாயத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கெள்விக்கு, அப்படி எதுவும் இல்லை என்று துபே கூறினார். ‘உத்தியில் எந்த மாற்றமும் இல்லை...தார்மீக, உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பொறுத்தவரை, இது மிகவும் ஆழமான இழப்பு.’ என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அவசர கடன் வசதி உத்தரவாதத் திட்டம் (ECLGS) பற்றி கூறிய ஆகாசா ஏர் தலைவர், ‘விமானத் துறையின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிப்பது பாராட்டுக்குரியது. ஸ்டார்ட்அப் ஏர்லைனுக்கும் அரசின் ஆதரவு கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஸ்டார்ட்அப் ஏர்லைன்களும் இதே கடினமான சூழலில்தான் இயங்குகின்றன. எந்த விதமான அரசின் உதவி கிடைத்தாலும் மகிழ்ச்சியாக இருப்போம்.’ என்று கூறினார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி, VDA உயர்ந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News