Today's Gold Rate: தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா...

கொரோனா பரவலைத் தொடர்ந்து, பொருளாதார தேக்க நிலை நிலவிய போது,  உலகம் முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்த்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2021, 11:53 AM IST
  • 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது.
  • இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கலால் வரி மற்றும் பிற வரி வகைகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாறுபடுகிறது.
Today's Gold Rate: தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா... title=

கொரோனா பரவலைத தொடர்ந்து, பொருளாதார தேக்க நிலை நிலவிய போது,  உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நினைத்ததால், அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து, தங்கத்தின் விலை விண்ணை தொட்டது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மீதான முதலீடுகள் குறைந்து,  தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். பின்னர் நிலைமை சற்று மேம்பட்டதில், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைய ஆரம்பித்தது.

2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டதன் காரணமாக, பிறகு தங்கம், வெள்ளி விலைகள் குறைந்தன.  

இந்நிலையில், தங்கத்தின் விலை (GOLD RATE) , கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து பலத்த ஏற்ற இறக்கங்களை கண்டு வந்த நிலையில், தற்போது சற்று தடுமாற்றத்தில் உள்ளது. குறைந்த விலையில் தங்கம் வாங்க நினைக்கும் சாமனியர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில், தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

ALSO READ | Gold / Silver Price today: தங்கம் வாங்க இன்னும் தாமதமா? மெல்ல உயர்கிறது தங்கம்!

சென்னையில் (Chennai) தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 360 என்ற அளவில் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹45 குறைந்து ₹4450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுனுக்கு ₹360 குறைந்து ₹35600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை, 8 கிராமுக்கு ₹38472 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 1 கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து ₹73.60க்கு விற்பனையாகிறது. அதே போன்று 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ₹73,600  என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கலால் வரி மற்றும் பிற வரி வகைகளுக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாறுபடுகிறது. 

ALSO READ | Gold Desire: நிறைய தங்கம் வாங்கி சேர்க்க ஆசையா? இது பெண்களுக்கான பொன் விரதம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News