இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 4700 ரூபாய் என்ற அளவில் உள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் கலால் வரி, மாநில வரி மாறுபடும் என்பதோடு நகைக் கடைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களிலும் வேறுபாடு இருப்பதால் தங்கத்தின் விலையில் மாறுதல்கள் காணப்படுகின்றன.
Gold Rate Today, 30 May 2021: கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, நகைக்கடைகள் மூடியிருக்கின்றன. எனவே, தங்கத்தின் விலையில் பெரிய மாறுதல் இருக்காது என்பது பொதுவான நம்பிக்கை.
ஆனால் அனைத்து ஊகங்களை உடைத்து எறிவதே இந்த மஞ்சள் உலோகத்தின் அபூர்வமான அம்சம் என்பது தெரிந்ததே. ஞாயிற்றுக்கிழமையான (2021, மே 30) இன்று, 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 90 ரூபாய் அதிகரித்துள்ளது என்று குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளம் கூறுகிறது. 100 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 4,65,800 ரூபாயாக இருக்கிறது.
சென்னையில் 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு 46,110 ரூபாய்க்கும், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு 50,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக சனிக்கிழமை 24 காரட் தங்க விலை 100 கிராமுக்கு 4,64,900 ரூபாய் ஆகவும், 10 கிராமுக்கு 44, 490 ரூபாய் ஆகவும் இருந்தது.
தேசிய தலைநகர் டெல்லியில், 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு 46,750 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு 50,750 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தாவில், 22 மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை முறையே 48,160 மற்றும் 50,740 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மும்பையில் 22 காரட் தங்கம் 46,580 ரூபாய் மற்றும் 24 காரட் தங்கத்திற்கு 47,580 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
Also Read | முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR