இரண்டு நாளில் ₹1,500 உயர்வு கண்ட தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்!

தேசிய தலைநகரில் புதன்கிழமை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,155 உயர்வு கண்டு ரூ.44,383-க்கு விற்கப்பட்டுள்ளது.

Last Updated : Mar 4, 2020, 04:28 PM IST
இரண்டு நாளில் ₹1,500 உயர்வு கண்ட தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்! title=

தேசிய தலைநகரில் புதன்கிழமை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,155 உயர்வு கண்டு ரூ.44,383-க்கு விற்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று, தங்கத்தின் விலை டெல்லியில் 10 கிராமுக்கு ரூ.43,228-ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.44,383-க்கு விற்கப்பட்டுள்ளது. வெள்ளி விலை பொறுத்தவரையில் ஒரு கிலோ ரூ.46,531-லிருந்து ஒரு கிலோ ரூ.1,198 உயர்வு கண்டு ரூ.47,729-ஆக விற்கப்படுகிறது.

நேற்றைய தினத்தில் இருந்து சுமார் 1100 ரூபாய் மாற்றத்தை கண்டுள்ள தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களை பொறுத்தவரையில் சுரார் 1500 ரூபாய் வேறுபாட்டை கண்டுள்ளது. 

சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி முறையே அவுன்ஸ் ஒன்றுக்கு 1,638 மற்றும் 17.17 அமெரிக்க டாலராக வர்த்தகம் செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் விளைவிலிருந்து நீடித்த பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக அமெரிக்க மத்திய வங்கி 50 bps ஆச்சரிய விகிதத்தைக் குறைத்த பின்னர் தங்கத்தின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. தங்கத்தின் விலைகள் குறைந்த வட்டி விகிதங்களிலிருந்து பாதுகாப்பான புகலிட முதலீட்டைப் பெறுகின்றன என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய சேதம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதன் நேரடி விளைவு இந்தியாவிலும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஈரான் அமெரிக்க இடையிலான போர் பிரச்சனையின் போது இந்தியா இவ்வாறான விலை ஏற்றத்தை கண்டது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அப்போது இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றம் இருந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் இதேப்போன்ற விலை ஏற்றம் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. 

உலகெங்கிலும் உள்ள மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இதுவரை சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றுள்ளது. இந்த கொடூர வைரஸுக்கு இதுவரை சுமார் 92,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News