Gold Rate, 2021 March 12: தங்கத்தின் விலை உயர்ந்தது, எவ்வளவு? இதோ…

சற்று நாட்களாக தங்கத்தின் விலையில் தேக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது தங்கத்தின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எந்த நகரத்தில் என்ன விலைக்கு விற்கிறது தங்கம்?  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2021, 09:50 AM IST
  • தங்கத்தின் விலை உயர்ந்தது
  • சென்னையில் பொன்னின் விலை சற்று குறைவு
  • டெல்லியில் தங்கத்தின் விலை சற்றே அதிகம்
Gold Rate, 2021 March 12: தங்கத்தின் விலை உயர்ந்தது, எவ்வளவு? இதோ… title=

புதுடெல்லி: சற்று நாட்களாக தங்கத்தின் விலையில் தேக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது தங்கத்தின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எந்த நகரத்தில் என்ன விலைக்கு விற்கிறது தங்கம்?  

நாட்டின் தலைநகரான டெல்லியில், 22 காரட் தங்கத்தின் விலை ரூ .43,800 லிருந்து 44,300 ஆக உயர்ந்தது, இது 10 கிராம் தங்கத்தின் விலை. அதுவே, மும்பையில் 43,710 ரூபாய்.
வெள்ளிக்கிழமையன்று காலையிலேயே தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ .28 அதிகரித்துள்ளது என்று குட் ரிட்டர்ன்ஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இந்த உயர்வைத் தொடர்ந்து, 10 கிராம் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கம் முறையே ரூ .43,710 மற்றும் ரூ .44,710 என விற்பனையாகின்றன. நேற்று, 10 கிராம் 22 காரட் தங்கம் ரூ .43,430 க்கு விற்கப்பட்டது. கலால் வரி மற்றும் மாநிலங்களின் வரிவிதிப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மாறுபடுகின்றன.  
இன்று உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன தெரியுமா?

தங்கம்

வாடிக்கையாளர்கள் உற்சாகம்

திருமண சீசனுக்கு முன்னதாக, தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது, அதைத் தொடர்ந்து விற்பனையில் பெரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சந்தை நிலவரம் கொரோனா பரவலுக்கு முன் இருந்த நிலையை இதுவரையிலுமே எட்டவில்லை என்று நகைக்கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Also Read | புத்தராக அவதாரம் எடுத்திருக்கும் Donald Trump ‘சிலைகள்’ஆன்லைனில் Trending

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News