Indian Railways: சேவை கட்டணம் ரத்து ரயில் பயணிகள் நிம்மதி

Indian Railways on Service Charge: ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே பெரும் நிவாரணம் அளித்துள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2022, 10:20 AM IST
  • ஐஆர்சிடிசி சமீபத்திய சுற்றறிக்கை
  • சேவைக் கட்டணம் கோருவது தவறானது
  • ஐஆர்சிடிசி சேவைக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கிறது
Indian Railways: சேவை கட்டணம் ரத்து ரயில் பயணிகள் நிம்மதி title=

நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களை உற்சாகம் படுத்தும். அதன்படி தற்போது பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்து, பிரீமியம் ரயில்களில் சேவைக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனுக்கு (ஐஆர்சிடிசி) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் இந்த விதியை அமலாகுவதற்கு முன், ரயிலில் பயணம் செய்யும் யாத்திரங்களின் உணவு மற்றும் பானங்களில் ஐஆர்சிடிசி சேவைக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கிறது.

இந்த ரயில்களில் பயணம் செய்பவர்கள் சேவைக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் புதிய விதியின் படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சாப்பிட விரும்பாத பயணிகளுக்கு சேவைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். ஆனால் காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு சேவைக் கட்டணமாக 50 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். இதுவரை ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்ய ரூ.50 சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும், காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு முன்பு போலவே சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | Flight Ticket Offer: வெறும் ரூ.100-ல் விமான பயணம், ரூ.50 லட்சம் மதிப்பிலான நன்மைகள், முந்துங்கள்!! 

சேவைக் கட்டணம் கோருவது தவறானது
நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சமீபத்தில், நுகர்வோர் விவகார அமைச்சகம் ஒரு உத்தரவில், சேவை கட்டணம் கோருவது தவறு என்று கூறியிருந்தது. எந்தவொரு ஹோட்டலும் அல்லது உணவகமும் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம், சேவைக் கட்டணம் தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது . சிசிபிஏ ஆனது சுயமாக வசூலிக்கும் சேவைக் கட்டணங்களை மசோதாவில் தடை செய்துள்ளது. இந்த உத்தரவுக்குப் பிறகு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளரை சேவைக் கட்டணத்தைச் செலுத்தும்படி கட்டாயப்படுத்த முடியாது. சேவைக் கட்டணத்தைச் செலுத்துவதா இல்லையா என்பது வாடிக்கையாளரின் சொந்த முடிவாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது.

சேவைக் கட்டணங்கள் குறித்த இந்திய ரயில்வேயின் சமீபத்திய சுற்றறிக்கை கீழே

ஐஆர்சிடிசி சமீபத்திய சுற்றறிக்கை
ஐஆர்சிடிசிக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, ரயில்வே வாரியம் பிரீமியம் ரயில்களான ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி மற்றும் வந்தே பாரத் ஆகியவற்றுக்கான தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கான கட்டணங்களை திட்டவட்டமாக குறிப்பிட்டது. சுற்றறிக்கையின்படி, விலைகள் ஜிஎஸ்டியை உள்ளடக்கியது, அதாவது கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உணவு ஆர்டர் செய்யவில்லை என்றால், 50 ரூபாய் சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும் படிக்க | IRCTC-ல் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..டிகிரி முடித்திருந்தால் போதும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News