நாளை தொடங்குகிறது தங்க பத்திர விற்பனை... அரசின் உத்திரவாதத்துடன் தங்கத்தை மலிவு விலையில் வாங்கலாம்!

தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருபவர்கள் சிறந்த வாய்ப்பு. அரசாங்கத்தால் நடத்தப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விற்பனை டிசம்பர் 18, 2023 முதல் வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 17, 2023, 06:54 AM IST
  • தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விற்பனை டிசம்பர் 18, 2023 முதல் தொடங்க உள்ளது.
  • தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய ஐந்து நாட்களுக்கு வாய்ப்பு.
நாளை தொடங்குகிறது தங்க பத்திர விற்பனை... அரசின் உத்திரவாதத்துடன் தங்கத்தை மலிவு விலையில் வாங்கலாம்! title=

Sovereign Gold Bond Scheme 2023-24 Series III: நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருபவர்கள் சிறந்த வாய்ப்பு. அரசாங்கத்தால் நடத்தப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விற்பனை டிசம்பர் 18, 2023 முதல் வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) அடுத்த தவணைக்கான விலையை நிர்ணயித்துள்ளது.

முதலீடு செய்ய ஐந்து நாட்களுக்கு வாய்ப்பு 

தங்கப் பத்திரத் திட்டத்தின்  (Sovereign Gold Bond scheme - SGB) அடுத்த விற்பனை டிசம்பர் 18 ஆம் தேதி திறக்கப்படும், இதில் சுத்தமான தங்கத்தை குறைந்த விலையில் வாங்கலாம். அரசு தங்கப் பத்திரங்களுக்கான வெளியீட்டு விலையை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது மற்றும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,199 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஐந்து நாட்களுக்கு அதை வாங்கலாம். SGB ​​திட்டம் மூலம் 2023-24 டிசம்பர் 18-22 வரை தஙக் பத்திரம் வாங்கலாம்.

செப்டம்பர் தவணையில் விலை விபரம்

இந்த ஆண்டின் SGB திட்டத்தின் மூன்றாவது விற்பனை இதுவாகும். முன்னதாக, இரண்டாவது விற்பானை 2023 செப்டம்பர் 11 முதல் 15 வரை திறக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், அரசாங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,923 என்ற விகிதத்தில் விற்பனை செய்துள்ளது. அதேசமயம் இந்த ஆண்டின் முதல் விற்பனை ஜூன் 19 முதல் ஜூன் 23 வரை திறந்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை விட மிகக் குறைந்த விலையில் தங்கத்தை வாங்குவதற்கு அரசாங்கம் வாய்ப்பளிக்கிறது. இது தவிர, நிதியாண்டின் நான்காவது விற்பனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும், இதற்கான தேதி பிப்ரவரி 12 முதல் 16 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உத்தரவாதமான உறுதியான வருமானத்தை வழங்கும் அரசாங்கம் 

மத்திய அரசின் இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் இதுவரை சிறந்த லாபத்தைப் பெற்றுள்ளனர். SBG திட்டத்தின் கீழ் அரசாங்கம் விற்கும் தங்கம் ஒரு வகை காகித தங்கம் அல்லது டிஜிட்டல் தங்கம் ஆகும், அதில் நீங்கள் எந்த அளவு தங்கத்தை எந்த விலையில் வாங்குகிறீர்கள் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதன் மூலம் வருமானம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தத் திட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.  தங்கப் பத்திரம் திட்ட முதலிடுகளுக்கு ஆண்டுதோறும் 2.5 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது. இது உறுதியான வருமானமாகும். இந்தத் திட்டத்தின் முதல் தவணை முதிர்ச்சியடைந்து 12.9 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.

மேலும் படிக்க | 1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்

SGB ​​திட்டம் செயல்படும் விதம்

அரசாங்கத்தின் தங்கப் பத்திரத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் அறிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் அதில் எந்த அளவு தங்கத்தை வாங்கினாலும், உங்களுக்கு சமமான மதிப்புள்ள ஒரு சவரன் தங்கப் பத்திரம் வழங்கப்படுகிறது. அதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள், ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப பெறும் விருப்பம் உள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்ட தங்கம் 24 காரட் அதாவது 99.9% தூய்மையானது.

இந்த தங்கப் பத்திரங்கள் வங்கிகள் (சிறு நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள் தவிர), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், பரிந்துரைக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்எஸ்இ) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (பிஎஸ்இ) போன்ற அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் மூலம் வழங்கப்படுகின்றன. விற்கப்படுகின்றன.

ஆன்லைன் விற்பனை மீது தள்ளுபடிகள் கிடைக்கும்

HUF, அதாவது இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கு, இந்தத் திட்டத்தில் தங்கம் வாங்குவதற்கான வரம்பு 4 கிலோவாகவும், அறக்கட்டளைகள் மற்றும் அதுபோன்ற நிறுவனங்களுக்கு இந்த வரம்பு 20 கிலோவாகவும் உள்ளது. SGB ​​திட்டத்தின் கீழ் ஆன்லைன் கொள்முதல் செய்யும் நபர்களுக்கும் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைனில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்தி தங்கத்தை வாங்கினால், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த விகிதத்தை விட ஒரு கிராமுக்கு ரூ.50 குறைவான விலையில் தங்கம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்கத்திலும் முதலீடு செய்யலாம் என்பது சிறப்பு. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நபர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 500 கிராம் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.

மேலும் படிக்க | UPI Autopay : ஆட்டோ பேமெண்ட் வரம்பு அதிகரிப்பு... எவ்வளவுன்னு தெரியுமா? இதோ முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News