CIBIL Score: இன்றைய காலகட்டத்தில் தேவைகளும் செலவுகளும் அதிகரித்து வருவதால், பெரும்பாலானோருக்கு ஏதோ ஒரு கட்டத்தில் கடன் தேவைப்படுகிறது. புதிய வீடு, புதிய வாகனம், குழந்தைகளின் படிப்பு, மகளின் திருமணம், என கடன் தேவை எல்லோருக்கும் உள்ளது. ஆனால் அனைவருக்கும் கடன் எளிதில் கிடைப்பதில்லை. ஏனெனில் கடனுக்கன ஒப்புதல் பெறுவதில் CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சிபில் மதிப்பெண் இருந்தால், வங்கி கடன் விண்ணப்பத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் என்பதோடு, சிறப்பான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டியில் பல வங்கிகள் கடன் கொடுக்கின்றன.
சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால், கடனைப் பெறுவதும் கடினம். வங்கி உங்களுக்குக் கடன் கொடுக்கத் தயங்காமல் இருக்கவும், குறைந்த வட்டியில் எளிதாக கடனைப் பெறவும், கண்டிப்பாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சில வங்கிகள் கிரெடிட் கார்டு கொடுப்பதையும் மறுக்கலாம். ஏனெனில் கிரெடிட் கார்டும் ஒரு வகை கடன் தான்.
கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவம்
கடன் வாங்கும் முன் கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்கள் CIBIL ஸ்கோர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை குறிக்கிறது. சிபில் மதிப்பெண் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் மீதான் நம்பக தன்மை அதிகரிக்கும். இதனால், வங்கி உங்களுக்கு எளிதாக கடனை வழங்கும். பொதுவாக, வங்கிகள் நிர்ணயித்துள்ள தரநிலைககளின் படி, கிரெடிட் ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால் அது சிறந்த கிரெடிட் ஸ்கோர் (Best Credit Score) என கருதப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் 300 என்ற அளவில் இருந்தால், அது மோசமான மதிப்பெண்ணாக கருதப்படுகிறது.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை சிறப்பாக பராமரிக்க செய்ய வேண்டியவை
உங்கள் கிரெடிட் ஸ்கோர் 700க்கு குறைவாக இருந்தால், அதை மேம்படுத்துவது முக்கியம். ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் வீட்டுக் கடன், தனிநபர் கடன் அல்லது வாகனக் கடன் போன்ற கடன்களுக்கான EMI அல்லது நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்திருந்தாலோ அல்லது பணம் எடுத்திருந்தாலோ , சரியான நேரத்தில் திரும்ப செலுத்துவது உங்கள் CIBIL ஸ்கோர் அதிகரிக்க உதவும்.
கடன் வரம்பு குறித்து கவனம் தேவை
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது, உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடன் வரம்பை மிக கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வங்கி வழங்கிய முழு கடன் வரம்பையும் ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. உங்கள் கடன் வரம்பில் 30 - 40 சதவீதத்தைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பல தரப்பில் அளவுக்கு அதிகமான கடன்கள்
ஒரே நேரத்தில் பல கடன்களை பெறுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாக பாதிக்கும். ஒரே நேரத்தில் பல கடன்களை வாங்குவதும், அதைச் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திப்பதும் பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை. ஆனால் அவ்வாறு செய்வது நிதி நிலையை பாதிக்கும். எனவே, நீங்கள் புதிய கடன் வாங்க விரும்பினால், முதலில் பழைய கடன்கள் அனைத்தையும் செலுத்திய பிறகு விண்ணப்பிக்கவும்.
தேவைக்கு மட்டுமே கடன் வாங்கவும்
உங்கள் சிபில் மதிப்பெண்ணை மேம்படுத்த, தேவைக்கு மட்டுமே கடன் வாங்கவும். எந்த அளவில் கடன் வாங்கினால் எளிதாக திருப்பிச் செலுத்த முடியுமோ, அந்த அளவிற்கு தான் கடனைப் பெற வேண்டும். அதிக கடன் வாங்கினால், மாதந்திர தவணையை சரியாக செலுத்த முடியாமல் போகலாம். அது உங்கள் CIBIL ஸ்கோரில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். CIBIL மதிப்பெண் மோசமாக இருந்தால் புதிய கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ