சர்வதேச நாடுகளில் பொருளாதார சிக்கல் தலைவிரித்தாடுகிறது. அதிலும், ஐரோப்பா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் பல்வேறு பிரச்சனைகளால் போராடி வருகின்றன. சக்திவாய்ந்த நாடுகள் பொருளாதார பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி துரித முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
தற்போது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதற்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ராக்கெட் வேகத்தில் உயரும் பொருளாதாரம்
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருபுறம், ரேட்டிங் ஏஜென்சிகள் இந்தியாவின் மதிப்பீடுகளை அதிகரித்துள்ளது என்றால், 2024 மே 31ம் நாளன்று வெளிஆன MOSPI தரவுகளின்படி, 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2024) இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. . கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2023-24 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உலகின் பெரிய பொருளாதாரம்: சரிந்த ஜப்பான், முன்னேறிய ஜெர்மனி.. அப்போ இந்தியா?
நம்பிக்கை கொடுக்கும் இந்தியப் பொருளாதாரம்
பொருளாதாரத்தில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், வளர்ச்சியின் அடிப்படையில், துரிதமாக முன்னேறும் மூன்றாவது பொருளாதாரமாக மாறியிருக்கிறது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) இது தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தரவுகளின்படி, இந்தியாவின் GDP வளர்ச்சி RBIயின் வளர்ச்சி மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது.
மே 31 அன்று NSO தரவுகளின்படி, FY24 இன் நான்காவது காலாண்டில் நாட்டின் GDP வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்த நிலையில், 6.9 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்னதாக மதிப்பிட்டிருந்தது. புளூம்பெர்க்கின் பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 7 சதவீதமாக மதிப்பிட்டுள்ளனர், ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் இந்த மதிப்பீடுகளை உடைத்து 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டியது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
அதே சமயம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2023-24 நிதியாண்டில் 8.2% ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் ப்ளூம்பெர்க் 7.9 சதவீதத்தை மதிப்பிட்டுள்ளது. மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (GVA) வளர்ச்சியும் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகவே இருந்தது. நான்காவது காலாண்டில் GVA வளர்ச்சி 6.3% ஆக இருந்தது.
இந்தியாவின் வளர்ச்சி சாதனை அளவில் துரிதமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் மந்தமான பொருளாதார வளர்ச்சியால் போராடிக் கொண்டிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் முயற்சியில் நிதி மேலாண்மையை நிர்வகிப்பதில் இந்த நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. ஜிடிபி வளர்ச்சி மதிப்பீடுகளை இந்தியாவின் 8.2% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, சீனாவின் வளர்ச்சி விகிதம் 5.2%, அமெரிக்காவின் வளர்ச்சி 3.1% என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரிசர்வ் வங்கியிடம் உங்கள் பணமும் முடங்கிக் கிடக்கலாம்! வாங்க ரெடியா?
இந்தியா மீது IMF நம்பிக்கை
கொரோனாவுக்குப் பிறகு, சீனாவின் வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் இன்னும் மீளவில்லை. ஏற்றுமதியில் வீழ்ச்சி, பணவீக்கம் குறைவு, திவாலான ரியல் எஸ்டேட், சரிந்து வரும் வங்கித் துறை மற்றும் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் வயதானவர்களாக இருப்பது, உழைக்கும் சக்தி குறைவது ஆகியவை சீனாவிற்கு சவாலாக உள்ளது. இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், 2024 நிதியாண்டிற்கான சீனாவின் வளர்ச்சி கணிப்பை 4.6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக சர்வதேச நாணய நிதியம் (IMF) உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் கடந்த ஆண்டு ஜிடிபி
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் இந்தியாவின் வளர்ச்சி ஆச்சரியப்படுத்தியது. 24ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.4 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்னதாக, இது 7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. 2022-23 நிதியாண்டில், ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் 2022-23 நிதியாண்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது என்பது இந்தியாவின் ஸ்திரமான வளர்ச்சியைக் காட்டுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ