குட் நியூஸ்! ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், EPF பங்களிப்பில் மாற்றம்,: ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம்

EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 10, 2024, 08:41 AM IST
  • இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இது EPF மற்றும் EPS -க்கான பங்களிப்பு வரம்புகளில் மூன்றாவது உயர்வாக இருக்கும்.
  • இதன் விளைவாக, மேலும் 75 லட்சம் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
  • பணி ஓய்வுக்குப் பிறகான ஓய்வூதியமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் நியூஸ்! ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், EPF பங்களிப்பில் மாற்றம்,: ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு திட்டம் title=

EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் மற்றும் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) சாதகமான செய்தி கிடைத்துள்ளது. வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டில் EPF -க்கான சம்பள வரம்பை 15,000 லிருந்து 21,000 அல்லது 25,000 ஆக உயர்த்துவது பற்றி மோடி அரசாங்கம் யோசித்து வருகிறது. இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஓய்வு பெறும்போது அதிக ஓய்வூதியமும் கிடைக்கும்.

Employees Pension Scheme

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இபிஎஃப் -இல் பங்காளிப்பதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 அல்லது ரூ.25,000 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 

Pensioners: அதிகரிக்கும் ஓய்வூதியம்

இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இது EPF மற்றும் EPS -க்கான பங்களிப்பு வரம்புகளில் மூன்றாவது உயர்வாக இருக்கும். இதன் விளைவாக, மேலும் 75 லட்சம் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். பணி ஓய்வுக்குப் பிறகான ஓய்வூதியமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPF Contribution: இபிஎஃப் பங்களிப்பு

- தற்போது, ​​EPFO ​​நிர்ணயித்த குறைந்தபட்ச அடிப்படை சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. 
- பணியாளர்கள் பெறும் சம்பளத்தில் இருந்து 12% இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) கணக்கில் மாதா மாதம் டெபாசிட் செய்யப்படுகின்றது.
- அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. 
- நிறுவனத்தின் பங்கில் 8.33%, ஓய்வூதிய நிதிக்கு (EPS) ஒதுக்கப்படுகிறது.
- மீதமுள்ள 3.67% இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படுகின்றது.

EPFO Higher Pension

அரசாங்கம் EPF சம்பள வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்தினால், அடிப்படை சம்பளம் ரூ.15,000க்கு மேல் உள்ள தொழிலாளர்களும் EPS திட்டத்தில் சேரலாம். இதன் மூலம் 75 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். அதாவது, அரசாங்கம் EPF சம்பள வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்தினால், ரூ.15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களும் இனி EPS திட்டத்தின் பலன்களை பெற முடியும்.

மேலும் படிக்க | Mutual Fund: ரூ.15,000 முதலீட்டை ரூ.4 கோடியாக மாற்றும் டாப்-அப் SIP மந்திரம்

இதற்கு முன்னதாக, 2014 ஆம் ஆண்டில் இபிஎஃப் சம்பள வரம்பு புதுப்பிக்கப்பட்டது. அப்போது அரசாங்கம் பிஎஃப் சம்பள வரம்பை 6,500 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக உயர்த்தியது.

Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

தற்போது, ​​EPFO ​​இன் கீழ் அடிப்படை சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% ஓய்வூதிய நிதிக்கு (EPS) ஒதுக்கப்படுகிறது. 3.67% PF கணக்கில் செல்கிறது. ஒரு ஊழியர் ரூ.15,000 வரை சம்பளம் பெற்றால், 8.33%, அதாவது ரூ.1,250 வரை EPS -க்கு செல்கிறது. மீதமுள்ள தொகை EPF -க்கு செல்கிறது. சம்பள வரம்ப்பு ரூ.21,000 ஆனால், அதிகபட்சமாக ரூ.1,749 EPS க்கு ஒதுக்கப்படும். இதனால் EPF இல் சேமிக்கப்படும் தொகை குறையும்.

தற்போது, ​​இபிஎஸ் ஓய்வூதியம் ரூ.15,000 சம்பள வரம்பைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், ரூ.21,000 மூலம் ஓய்வூதியம் கணக்கிடப்படும். ஒரு ஊழியரின் ஓய்வூதியம் பெறக்கூடிய பணிக்காலம் 30 ஆண்டுகளாக இருந்து, 60 மாதங்களுக்குள் ரூ.15,000 க்கு மேல் சம்பாதித்தால், தற்போது அவரது ஓய்வூதியத் தொகை ஒவ்வொரு மாதமும் ரூ.6,857 ஆக இருக்கும். மாதம் ரூ.21,000 சம்பளத்தின் அடிப்படையில் அவரது மாத ஓய்வூதியம் ரூ.9,600 ஓய்வூதியமாக அதிகரிக்கும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் 10x15x18 ஃபார்முலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News