கடந்த மே 11ம் தேதியன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்கிலிருந்து ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டக் (இபிஎஸ்) கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசத்திற்குள் எழுத்துப்பூர்வ ஒப்புதலை கட்டாயம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர் கூடுதல் நிதியை மாற்றுவதற்கு அல்லது டெபாசிட் செய்வதற்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் எத்தகைய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மூன்று மாத காலக்கெடுவிற்குள் எழுத்துப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படாவிட்டால் என்ன ஆகும் என்பது பெரும்பாலான ஊழியர்களின் மனதில் எழக்கூடிய ஒரு கேள்வியாக இருக்கிறது. இதுதவிர ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள் உயர் இபிஎஸ் ஓய்வூதிய விருப்பத்தைத் தொடர விரும்பவில்லை என்றால், அதிலிருந்து வெளியேற முடியுமா என்கிற கேள்வியும் பொதுவாக இருந்து வருகின்றது.
ஒரு ஊழியர் அதிக இபிஎஸ் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன், அவர்கள் பங்கேற்பதை நிறுத்தவோ அல்லது திட்டத்தில் இருந்து விலகவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதிக இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும்போது பணத்தை திருப்பி அனுப்பும் போது அல்லது டெபாசிட் செய்யும் போது எழுத்துப்பூர்வ ஒப்புதல் சமர்ப்பிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. இருப்பினும் இதுகுறித்த தெளிவான அறிவிப்பை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்லாவின் பங்குதாரரான வைபவ் பரத்வாஜ் இதுகுறித்து கூறுகையில், மே 11 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை முதன்மையாக இபிஎஸ்-ன் கீழ் அதிக ஓய்வூதியத் தொகையைத் தேர்ந்தெடுத்த தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார். எனவே, இந்த மூன்று மாத காலப்பகுதியில் ஓய்வூதியம் பெறுவோர் வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஓய்வூதியம் பெறுவோர் ஒப்புதல் வழங்காமல் இருந்தாலோ அல்லது கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தேவையான நிலுவைத் தொகையை டெபாசிட் செய்யத் தவறினாலோ, அதிக ஓய்வூதியத்திற்கான விருப்பத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று கருதப்படும். ஓய்வூதியம் பெறுவோர் ஒப்புதல் வழங்க மறுத்து அல்லது தேவையான நிலுவைத் தொகையை டெபாசிட் செய்ய மறுத்து வெளியேற முடிவு செய்தால் இபிஎஃப்ஓ எடுக்கும் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இபிஎஸ் என்பது இந்தியாவில் இபிஎஃப் அமைப்பின் ஒரு அங்கமாகும், இது குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு இபிஎஃப்-க்கு பங்களித்த நபர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குகிறது. ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகும், அவர்களின் இறப்பு அல்லது இயலாமையின் போதும் அவர்களின் நிதி நிலையை சிறப்பான நிலையில் வைத்திருப்பதே இதன் முக்கியமான நோக்கமாகும்.
மேலும் படிக்க | காலாவதியான கார்டுக்கு வந்த பில்... SBI கார்டுக்கு ₹2,00,000 அபராதம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ