எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்ற மூன்று சக்கர வாகனங்கள், கார் ஆகியவற்றின் பதிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய கனரகத் தொழில் அமைச்சகம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும். மேலும் 50 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவியும் கிடைக்கும்.
ரூபாய் 500 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் வாகன மேம்பாட்டு திட்டத்தின் ( Electric Mobility Promotion Scheme 2024), இந்தத் திட்டத்தில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் மாதம் முதல், ஜூலை மாதம் வரை 4 மாதங்களுக்கு அமல்படுத்தப்படும், இந்தத் திட்டத்தின் மூலம், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள்.
மின்சார வாகனங்களின், பயன்பாடு மட்டுமல்லாது உற்பத்தியும் அதிகரிக்க உதவும் இந்த திட்டம் குறித்து குறிப்பிட்ட, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே இந்தத் திட்டத்திற்கு இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றார். சுமார் 3.3 லட்சம் இருசக்கர வாகன வாங்குபவர்களுக்கு நிதி உதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ், அடுத்த நான்கு மாதங்களுக்கு சிறிய இ-ரிக்ஷாக்கள் அல்லது சிறிய மின்சார மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000 உதவி வழங்கப்படும். இதனுடன் பெரிய ஆட்டோ ரிக்ஷா போன்ற முன்று சக்கர மின்சார வாகனம், வாங்கும் 50,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்படும். ஏப்ரல் 1 முதல் இந்த திட்டத்தின் கீழ் மின்சார வகான்ம் வாங்குபவர்கள் பலனடையலாம். தற்போது நடைமுறையில் உள்ள, மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய திட்டம் ஏப்ரல் 1, 2024 முதல் அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஏழைகள் கூட ‘இந்த’ கார்களை வாங்கலாமாம்! மிஸ் பண்ணிடாதீங்க..
மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்கள்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் மின்சார வாகன உற்பத்தியையும் ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதால், நடுத்தர நிலையிலான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த தொழிற்துறையில் மின்சார இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டு வாக்கில் 6-8 சதவீதமாக அதிகரிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த அளவு தற்போது தோராயமாக 5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா திகழ்வதை ஊக்குவிக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும். புகழ்பெற்ற உலகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளர்களை ஈர்க்கும் வகையிலும், மின்னணு-வாகன உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | DA, DR உயர்வு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ