அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: அறிக்கை

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 மில்லியன் நல்ல ஊதியம் தரும் வேலைகள் உருவாக்கப்படும் என்றும், அவற்றின் எண்ணிக்கை 2030-க்குள் 8 கோடியாக அதிகரிக்கும் என்றும் மத்திய அரசாங்கம் மதிப்பிடுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 1, 2020, 12:06 AM IST
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 மில்லியன் நல்ல ஊதியம் தரும் வேலைகள் உருவாக்கப்படும்.
  • 2030-க்குள் வேலை வாய்ப்பு எண்ணிக்கை 80 மில்லியனாக அதிகரிக்கும்.
  • "அசெம்பிள் இன் இந்தியா" மற்றும் "மேக் இன் இந்தியா திட்டங்கள் உலக சந்தை பங்கை அதிகரிக்கும்.
  • சீனா போன்ற ஒரு மூலோபாயத்தை பின்பற்ற இந்தியாவுக்கு பரிந்துரை.
அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: அறிக்கை title=

புது டெல்லி: மத்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்க நல்ல நாட்கள் வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 மில்லியன் நல்ல ஊதியம் தரும் வேலைகள் உருவாக்கப்படும் என்றும், அவற்றின் எண்ணிக்கை 2030-க்குள் 8 கோடியாக அதிகரிக்கும் என்றும் மத்திய அரசாங்கம் மதிப்பிடுகிறது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்த பொருளாதார கணக்கெடுப்பின்படி, 2025 ஆம் ஆண்டில் நல்ல ஊதியத்துடன் நான்கு கோடி வேலைகள் நாட்டில் உருவாக்கப்படும். 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை எட்டு கோடியாக இருக்கும் எனக் கூறினார்.

தொழிலாளர் அடிப்படையிலான ஏற்றுமதியை ஊக்குவிக்க சீனாவைப் போலவே இந்தியாவுக்கு வாய்ப்பும் இருப்பதாக பொருளாதார ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் "அசெம்பிள் இன் இந்தியா" (Assembled in India) மற்றும் "மேக் இன் இந்தியா" (Make in India) திட்டங்களுடன், உலக ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் பங்கு 2025 க்குள் 3.5% ஆக உயரும். இது 2030 க்குள் ஆறு சதவீதம் வரை உயரும் எனக் கூறப்பட்டு உள்ளது. 

பொருளாதார கணக்கெடுப்பின்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவை ஐந்தாயிரம் பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கு தேவையான மதிப்பு கூட்டலில் நெட்வொர்க் பொருட்களின் ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்கு அதிகரிக்கும்.

பொருளாதார கணக்கெடுப்பு அறிக்கையில், சீனா போன்ற ஒரு மூலோபாயத்தை இந்தியா பின்பற்ற பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு தொழிலாளர் குறிப்பாக நெட்வொர்க் தயாரிப்புகளில் பெரிய அளவிலான நிபுணத்துவம் தேவைப்படுகிறது. மேலும், நெட்வொர்க் தயாரிப்புகளை ஊக்குவிக்க பெரிய அளவிலான செயல்பாடுகளுக்கும், ஆலோசனை கூட்டங்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

இது தவிர, பணக்கார நாடுகளின் சந்தையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வர்த்தக சமநிலையில் இந்தியா செய்த வர்த்தக ஒப்பந்தங்களின் தாக்கத்தை பொருளாதார ஆய்வு பகுப்பாய்வு செய்கிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News