POMIS, PPF, Home Loan....மனைவியுடன் ஜோடியாக முதலீடு, ஜோரான இரட்டிப்பு லாபம்

Investment Tips: சில திட்டங்களில் முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர் தனது மனைவியையும் அதில் சேர்த்துக் கொண்டால், அவருக்கு கிடைக்கும் லாபம் இரட்டிப்பாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 4, 2024, 02:44 PM IST
  • தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம்.
  • பொது வருங்கால வைப்பு நிதி.
  • வீட்டுக் கடன்.
POMIS, PPF, Home Loan....மனைவியுடன் ஜோடியாக முதலீடு, ஜோரான இரட்டிப்பு லாபம் title=

Investment Tips: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. நமது வாழ்வில்  பணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது. பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதனை சேர்த்து வைப்பதும் முக்கியமாகும். எதிர்காலத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்கள் அதற்காக பல ஆய்வுகளை செய்து பல வித திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். 

இதில் சில திட்டங்களில் நமக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. இவற்றை அடையாளம் கண்டு இப்படிப்பட்ட சிறப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், கூடுதல் நன்மைகள் கிடைக்கும். சில திட்டங்களில் முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர் தனது மனைவியையும் அதில் சேர்த்துக் கொண்டால், அவருக்கு கிடைக்கும் லாபம் இரட்டிப்பாகும். இது தவிர, முதலீட்டாளரின் மனைவி மூலம் கூடுதல் நன்மைகளும் கிடைக்கும். 

கூடுதல் நன்மைகளை பெற மனைவியுடன் இணைந்து முதலீடு செய்ய வேண்டிய முக்கியமான திட்டங்கள் என்ன? இவற்றில் கிடைக்கும் நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme)

அஞ்சல் அலுவலகத்தின் எம்ஐஎஸ் திட்டம் (Post Office MIS) ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளருக்கு வருமானத்தை வழங்கும் திட்டமாகும். இதில், டெபாசிட் செய்த தொகைக்கு கிடைக்கும் வட்டி மூலம் சம்பாதிக்கலாம். முதலீட்டாளரின் அசல் தொகை 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குத் திருப்பித் தரப்படும். இந்தத் திட்டத்தில், ஒரே கணக்கில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்து, 7.4% வட்டியில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,550 சம்பாதிக்கலாம். எனினும், நீங்கள் இதில் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கில் முதலீடு செய்தால், அதற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15,00,000 ஆக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கூட்டுக் கணக்கு மூலம் மாதா மாதம் 7.4% வட்டியில் ரூ.9,250 வரை சம்பாதிக்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)

PPF திட்டம் பணம் சம்பாதிப்பதற்கும் வரியைச் சேமிப்பதற்கும் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக கருதப்படுகின்றது. ஒருவர் தனது பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கை (PPF Account) மட்டுமே திறக்க முடியும் என்று விதி உள்ளது. இதில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். ஆனால் முதலீட்டாளர் மற்றும் அவரது மனைவி என இருவரும் பணியாற்றினால், இருவரும் தங்கள் பெயர்களில் இந்த கணக்கைத் தொடங்கலாம். 

இதன் மூலம், கணவன்-மனைவி இருவரும் ஆண்டுக்கு தனித்தனியே ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த கணக்குகளில் தனித்தனியாக வட்டியும் பெறலாம். இதன் மூலம் அவர்களின் முதலீட்டு வரம்பு மற்றும் வட்டி இரண்டையும் இரட்டிப்பாக்கலாம். தற்போது PPF இன் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு E-E-E பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் செய்யப்படும் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றிலும் முற்றிலுமாக வரி விலக்கு கிடைக்கும். கிளப்பிங் விதிகள் இதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

மேலும் படிக்க | PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்

வீட்டுக் கடன் (Home Loan)

வீடு வாங்குவதும் ஒரு முதலீடுதான். ஏனென்றால் காலப்போக்கில் சொத்தின் மதிப்பு கூடுகிறது. இந்த காலத்தில் பெரும்பாலும் அனைவரும் வீட்டுக்கடன் எடுத்து வீட்டை வாங்குகிறார்கள். நீங்கள் சொத்து வாங்கும்போது, ​​உங்கள் மனைவியை இணை விண்ணப்பதாரராக்கி கூட்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி செய்தால், உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். 

கடன் வழக்கத்தை விட சிறிது மலிவாகக் கிடைக்கும் என்பது முதல் நன்மை. பொதுவாக, பெண் இணை விண்ணப்பதாரராக இருந்தால், கடன் வழங்கும் நிறுவனங்கள் தோராயமாக 0.05 சதவீதம் (5 அடிப்படை புள்ளிகள்) குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறார்கள். இது தவிர, உங்கள் மனைவி மற்றும் நீங்கள் இருவரும் சம்பாதித்தால், கடன் தொகை வரம்பும் அதிகரிக்கிறது.

வரிச் சலுகை

கூட்டு வீட்டுக் கடனில் வருமான வரிச் சலுகைகளும் கிடைக்கும். இது வரிச் சலுகையை இரட்டிப்பாக்குகிறது. கூட்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதன் மூலம், கடன் வாங்குபவர்கள் இருவரும் வெவ்வேறு வருமான வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விண்ணப்பதாரர்கள் இருவரும் சொத்து உரிமையாளர்களாக இருந்தால் மட்டுமே, அதாவது இருவரும் இணைந்து சொத்தை வாங்கினால் மட்டுமே இந்த பலன் கிடைக்கும். 

உங்கள் மனைவியுடன் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் இரட்டிப்பு வரிச் சலுகையைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். அசல் தொகையில் பிரிவு 80C-இன் கீழ், நீங்கள் இருவரும் தலா ரூ. 1.5 லட்சத்தை அதாவது மொத்தம் ரூ. 3 லட்சத்தை க்ளெய்ம் செய்யலாம்.  80சியின் கீழ் பெறலாம். மேலும், பிரிவு 24B -இன் கீழ், இருவருக்கும் 2 லட்சம் ரூபாய்க்கான வரிச் சலுகை கிடைக்கும். இதன்படி பார்த்தால், மொத்தமாக ரூ.7 லட்சம் வரை வரிச் சலுகைகள் கிடைக்கும். இப்பினும், இது வீட்டுக் கடனின் அளவைப் பொறுத்து மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News