வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO!

EPFO Life Certificate : 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான செய்தி! லைஃப் சர்டிபிகேட் தொடர்பான முக்கிய அப்டேட்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2024, 08:44 PM IST
  • டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
  • ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழ்
  • உயிர்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கும் வசதி
வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழ் ! ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி தரும் EPFO! title=

ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற, ஒவ்வொரு ஆண்டும் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். ஓய்வூதியம் தொடர்பான விதிகளை EPFO ​​எளிமைப்படுத்தியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஓய்வூதியம் பெறுவதற்காக ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

வங்கிகளுக்குச் சென்று உயிர்வாழ் சான்றிதழை வாங்குவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டியிருந்தது. இதற்காக வயதானவர்கள் அடிக்கடி வங்கிக்கு சென்று அலைய வேண்டியிருந்தது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்க 2015 இல் டிஜிட்டல் லைஃப் சான்றிதழை (DLC) EPFO ஏற்றுக்கொண்டது. EPFO பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் அடிப்படையில் EPS ஓய்வூதியதாரர்களிடமிருந்து DLC ஐ ஏற்றுக்கொள்கிறது.

பயோமெட்ரிக் அடிப்படையிலான உயிர்வாழ் சான்றிதழை டெபாசிட் செய்ய, ஓய்வூதியம் பெறுபவர் எந்த வங்கி, தபால் அலுவலகம், பொதுவான சேவை மையம் அல்லது EPFO ​​அலுவலகக் கிளைக்கு செல்ல வேண்டும். இதற்கு காரணம், அங்கு தான் கைரேகை/கருவிழியை அங்கீகரிக்கும் இயந்திரம் உள்ளது.

மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி?

முக அங்கீகார தொழில்நுட்பம்  

வங்கிகள்/அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றிற்கு முதியவர்கள் செல்வதில் ஏற்படும் சிரமங்களை குறைக்க, MeitY மற்றும் UDAI ஆகியவை முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FAT) உருவாக்கியுள்ளன, இதன் கீழ் உயிர்வாழ் சான்றிதழின் சான்றாக முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

EPFO இந்த தொழில்நுட்பத்தை ஜூலை 2022 இல் ஏற்றுக்கொண்டது. இதனால், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வீடுகளில் இருந்து DLC ஐ டெபாசிட் செய்ய முற்றிலும் புதிய செயல்முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஓய்வூதியதாரர்கள் ஆண்ட்ராய்டு சார்ந்த எந்த ஸ்மார்ட்ஃபோனையும் பயன்படுத்தி உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான நடைமுறையை செய்து முடிக்கலாம்.

இந்த முறை மூலம், ஓய்வூதியம் பெறுபவரை அவரது வீட்டில் அமர்ந்து ஸ்மார்ட்போன் கேமரா மூலம், தங்களது அடையாளத்தை சரிபார்க்கும் நடைமுறையை செய்யலாம். UIDAI ஆதார் தரவுத்தளத்திலிருந்து UIDAI முக அங்கீகார செயலியைப் பயன்படுத்தி இந்த அங்கீகாரம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | தேர்தல் முடிவுகளின் எதிரொலி: மூன்றே நாளில் இரட்டிப்பான நிலத்தின் மதிப்பு...

ஆண்டுதோறும் 200% அதிகரிப்பு
EPFO இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 2022-23ல் முக அங்கீகார தொழில்நுட்ப அடிப்படையிலான உயிர்வாழ் சான்றிதழ்கள் 2.1 லட்சம் ஓய்வூதியதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, இது 2023-24 இல் 6.6 லட்சமாக அதிகரித்து, இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு 200% அதிகரிப்பைக் காட்டுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் 6.6 லட்சம் FAT அடிப்படையிலான DLCக்கள் அந்த ஆண்டில் பெறப்பட்ட மொத்த DLCக்களில் 10% ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் ஓய்வூதியதாரர்களிடமிருந்து மொத்தம் 60 லட்சம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

முக அடையாளம் காணும் முறையைப் பயன்படுத்த, உங்கள் ஸ்மார்ட்போனில் ஆதார் ஃபேஸ் ஆர்டி மற்றும் 'ஜீவன் பிரமான்' ஆகிய இரண்டு அப்ளிகேஷன்களை நிறுவ வேண்டும். இந்த செயலிகளுக்கான ஆபரேட்டர் அங்கீகாரம் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மூலம் செய்யப்படுகிறது.

முகத்தை ஸ்கேன் செய்வதை உறுதிசெய்ய, இந்த செயலிகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கேன் முடிந்ததும், ஜீவன் பிரமான் ஐடி மற்றும் பிபிஓ எண்ணுடன் மொபைல் திரையில் DLC சமர்ப்பிப்பு உறுதிசெய்யப்பட்டு, உங்கள் வீட்டில் இருந்தபடியே செயல்முறை வசதியாக இருக்கும்.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த விரிவான வீடியோ EPFO ​​இன் அதிகாரப்பூர்வ YouTube ஹேண்டில் @SOCIALEPFO இல் கிடைக்கிறது. இந்த முறையின் வசதி, ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று EPFO ​​நம்பிக்கை கொண்டுள்ளது.

மேலும் படிக்க | கிசான் சம்மான் நிதி அதிகரிப்பு! ₹ 8000 கொடுக்க முடிவெடுத்த அரசு! விவசாயிகளுக்கு ஜாலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News