நியூடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஊழியர்களுக்கு பண்டிகைக் கொண்டாட்டத்தை அளித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 80,000 நான் கெஜடட் (non-gazetted) குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு டெல்லி முதலமைச்சர் போனஸ் அறிவித்தார். இதற்காக மொத்தம் ரூ.56,000 கோடி செலவாகும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். ஊழியர்களின் வாழ்க்கையை சிறப்பாகச் செய்ய எப்போதும் தனது அரசு முயற்சி செய்து வருவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal says "...We will provide Rs 7,000 as a bonus to the Group B non-gazetted and Group C employees of Delhi Government. Currently, around 80,000 Group B non-gazetted and Group C employees are working with Delhi Govt. A total of Rs 56 crores will be… pic.twitter.com/A42efxIIsG
— ANI (@ANI) November 6, 2023
நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை "இருளை வெற்றி கொண்ட ஒளியை கொண்டாடும் திருவிழா; தீமையின் மீது நன்மை மற்றும் அறியாமையின் மீது அறிவின் வெற்றியின்அடையாளமாக கொண்டாடுகிறார்கள்" என்று முதலமைச்சர் கேஜ்ரிவால் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தின் அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.
மேலும் படிக்க | தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!
டெல்லி அரசைப் போலவே, துணை ராணுவப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் குரூப் பி அல்லாத அதிகாரிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இது சம்பந்தமாக, 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான உற்பத்தி அல்லாத இணைக்கப்பட்ட போனஸ் (அட்-ஹாக் போனஸ்) கணக்கிடுவதற்கான வரம்பை நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மத்திய அரசு கடந்த வாரம் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அடிப்படை சம்பளத்தில் 46 சதவீதமாக உயர்த்தி, நான் கெஜடட் ரயில்வே அரசு ஊழியர்களுக்கான போனஸாக 78 நாட்கள் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்தது.
அகவிலைப்படி (DA) மற்றும் Dearness Relief (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணை வெளியீடு ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். விலைவாசி உயர்வுக்காக, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முறையே ஆண்டுக்கு இரண்டு முறை DA மற்றும் DR வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களைத் தவிர, ஓய்வூதியம் பெறுவோரும் அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுவார்கள். டிஏவைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் டிஆர் அதே அளவில் அதிகரிக்கிறது. ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே அளவு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் அதிகரிக்கும்.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (பிஎல்பி) வழங்கப்படுவதால் கருவூலத்திற்கு ரூ.1,968.87 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தாக்கூர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ