Credit Card சமீபத்திய அப்டேட்: ஜூலை 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்

Credit Card Update:  ஜூலை 1, 2022 முதல், கிரெடிட் தொடர்பான சில விதிகளும் மாற்றப்பட உள்ளன. இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2022, 04:50 PM IST
  • ஜூலை 1, 2022 முதல், கிரெடிட் கார்ட் தொடர்பான சில விதிகளும் மாற்றப்பட உள்ளன.
  • பில்களை அனுப்புவதில் தாமதம் இருக்கக்கூடாது.
  • நிறுவனம் மூலம் கிரெடிட் கார்டின் தவறான பில் வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் அதற்கு புகார் அளிக்கலாம்.
Credit Card சமீபத்திய அப்டேட்: ஜூலை 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம் title=

கிரெடிட் கார்டு: இன்றைய காலகட்டத்தில், கேஷ்லெஸ் அதாவது பணமில்லா பரிவர்த்தனையின் போக்கு அதிகமாகிவிட்டது. இந்த முறையிலும் எளிதாகவும் விரைவாகவும் பணம் செலுத்தலாம். ரொக்கமில்லாமல் பணம் செலுத்துவதற்கான ஒரு வழிமுறை கிரெடிட் கார்ட் பயன்பாடாகும். 

கிரெடிட் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்வதில் பல நன்மைகள் உள்ளன. ஜூலை 1, 2022 முதல், கிரெடிட் தொடர்பான சில விதிகளும் மாற்றப்பட உள்ளன. இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

ஜூலை 1 முதல் மாற்றங்கள் ஏற்படும்

சில கிரெடிட் கார்டு விதிகள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவிப்பில் அறிவித்துள்ளது. இந்த விதிகளில், தவறான பில், பில் வழங்கும் தேதி, தாமதமாக பில் அனுப்புதல் மற்றும் கிரெடிட் கார்டை மூடுதல் போன்றவை தொடர்பாக பல விதிகள் மாறப்போகின்றன. இந்த விதிகள் 1 ஜூலை 2022 முதல் மாற்றப்படும்.

தவறான பில்

நிறுவனம் மூலம் கிரெடிட் கார்டின் தவறான பில் வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் அதற்கு புகார் அளிக்கலாம். கார்டுதாரரின் புகாருக்கு 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி: இன்று முதல் LPG Connection பெற அதிக செலவாகும் 

பில்களை அனுப்புவதில் தாமதம் இருக்கக்கூடாது

பில் மற்றும் ஸ்டேட்மென்ட்களை உருவாக்கவோ, அனுப்பவோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பவோ தாமதம் இல்லாமல் இருப்பதை கார்டு வழங்குபவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதே நேரத்தில், அட்டைதாரர்களுக்கு, வட்டி கட்டாமல் பில்லை கட்டும் அளவு போதிய நேரமும் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, கார்டு வழங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதிசெய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டை நிறுத்தாவிட்டால் அபராதம்
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் கிரெடிட் கார்டை நிறுத்துவதற்கு விண்ணப்பித்தால், கிரெடிட் கார்டு வழங்குபவர் ஏழு வேலை நாட்களுக்குள் கார்டை மூட வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, கிரெடிட் கார்டு மூடப்பட்டவுடன், அட்டைதாரருக்கு மின்னஞ்சல், எஸ்எம்எஸ் போன்றவற்றின் மூலம் உடனடியாக மூடப்பட்டதைத் தெரிவிக்க வேண்டும். 

மறுபுறம், கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் ஏழு வேலை நாட்களுக்குள் கிரெடிட் கார்டை மூடவில்லை என்றால், நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரே நிபந்தனை என்னவென்றால், கிரெடிட் கார்டு வைத்திருப்பவரின் கணக்கில் நிலுவை இருப்பு எதுவும் இருக்கக்கூடாது. 

அனுமதி இல்லாமல் கார்ட் வழங்கல்

ஆர்பிஐ தேவையற்ற கிரெடிட் கார்டுகளை வழங்குவதை கண்டிப்பாக தடை செய்துள்ளது. வாடிக்கையாளரின் அனுமதியின்றி நிறுவனம் கிரெடிட் கார்டுகளை வழங்க முடியாது. வாடிக்கையாளரின் அனுமதியின்றி கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு பில் அனுப்பப்பட்டால், நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்.

பில்லிங் சைக்கிள்

ஜூலை 1, 2022 முதல், கிரெடிட் கார்டு பில்லிங் சைக்கிள் முந்தைய மாதம் 11 ஆம் தேதி தொடங்கி நடப்பு மாதம் 10 ஆம் தேதி வரை தொடரும் என்று ஆர்பிஐ கூறுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News