முக்கிய விதிகளில் மாற்றம்... புத்தாண்டு பிறப்பதற்கு முன் ‘இந்த’ வேலைகளை முடிச்சுடுங்க..!!

புதிய ஆண்டு (புத்தாண்டு 2024) தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல முக்கிய விதிகளில் மாற்றம் வரப்போகிறது. தவிர, சில முக்கியப் பணிகளுக்கான காலக்கெடுவும் முடிவடையும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2023, 08:42 AM IST
முக்கிய விதிகளில் மாற்றம்... புத்தாண்டு பிறப்பதற்கு முன் ‘இந்த’ வேலைகளை முடிச்சுடுங்க..!! title=

புதிய ஆண்டு (புத்தாண்டு 2024) தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல முக்கிய விதிகளில் மாற்றம் வரப்போகிறது. தவிர, சில முக்கியப் பணிகளுக்கான காலக்கெடுவும் முடிவடையும். டிசம்பரில் இந்த வேலையை நீங்கள் முடிக்கவில்லை என்றால், உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். பணம் தொடர்பான இந்த ஐந்து பணிகளை நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டும். இதில் வருமான வரி ரிட்டர்ன் முதல் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற முக்கியமான பணிகள் வரை அனைத்தும் அடங்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் சிக்கல் ஏற்படும்

நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் நாமினியைச் சேர்க்க வேண்டும். ஏனெனில் டிமேட் கணக்கில் நாமினி விபரத்தை சேர்க்க கடைசித் தேதியாக டிசம்பர் 31 ஆம் தேதியை செபி (SEBI) வழங்கியுள்ளது. நாமினியின் பெயர் சேர்க்கப்படாவிட்டால், டீமேட் கணக்கு முடக்கப்படலாம், இதன் காரணமாக நீங்கள் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. மியூச்சுவல் ஃபண்டுகளில் என்னும் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்தாலும், நாமினி பெயரை குறிப்பிடுவது கட்டாயம். அவ்வாறு செய்யத் தவறினால், பணத்தை டெபாசிட் செய்வதிலும் திரும்பப் பெறுவதிலும் சிரமம் ஏற்படலாம்.

வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான வரித் துறையானது ஜூலை 31, 2023 அன்று வருமான வரிக் கணக்கைத் தாக்கல் (Income Tax Return) செய்வதற்கான கடைசித் தேதியாக நிர்ணயித்துள்ள நிலையிலும், பல வரி செலுத்துவோர் இந்த வேலையை இன்னும் முடிக்கவில்லை. அத்தகைய நபர்கள் 31 டிசம்பர் 2023க்குள் தாமதம் ஆனதற்கான அபராதக் கட்டணத்துடன் புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், ஜனவரி 1 முதல் கூடுதல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

வங்கி லாக்கர் ஒப்பந்தம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் லாக்கர் ஒப்பந்தத்தை திருத்தியமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்காவிட்டால் வங்கி லாக்கரை காலி செய்ய நேரிடும். உங்களிடம் வங்கி லாக்கர் இருந்தால், புதிய லாக்கர் ஒப்பந்தத்தை கூடிய விரைவில் முடிக்கவும்.

UPI ஐடி மூடப்படும்

கடந்த ஒரு வருடமாகப் பயன்படுத்தப்படாத UPI ஐடிகள் நீக்கப்படும். அதாவது கடந்த ஒரு வருடமாக ஆக்டிவ் ஆக இல்லாத Paytm, Google Pay, Phone Pay போன்ற ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஸின் UPI ஐடியை நீக்க இந்திய தேசிய கட்டணக் கழகம் முடிவு செய்துள்ளது. உங்களிடம் அத்தகைய UPI ஐடி இருந்தால், நீங்கள் உடனடியாக பரிவர்த்தனை செய்து அதனை ஆக்டிவ் ஆக வேண்டும்.

எஸ்பிஐயின் நிலையான வைப்பு திட்டம் 

பாரத ஸ்டேட் வங்கியின் அம்ரித் கலாஷ் நிலையான வைப்புத் திட்டத்தில் (SBI Amrit Kalash FD Scheme)  முதலீடு செய்வதற்கான வாய்ப்பு 31 டிசம்பர் 2023 வரை மட்டுமே. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ள  400 நாள் FD திட்டமாகும். இதில் 7.60% வரை வட்டி அளிக்கிறது. இதில், முன்கூட்டியே பணத்தை எடுக்கும் வசதி மற்றும் கடன் வசதிகள் உள்ளன.

மேலும் படிக்க | நாம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரியின் புதிய விதிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News