கடன் தவணை சலுகையை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்: SC-யிடம் மத்திய அரசு

கடன்கள் அடைக்க முடியாமல் திணறியவர்களுக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி  அறிவித்த கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை ஆக்ஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2020, 03:28 PM IST
  • கடன்கள் அடைக்க முடியாமல் திணறியவர்களுக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை ஆக்ஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
  • மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கொரோனா தாக்கத்தினால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளன.
கடன் தவணை சலுகையை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்: SC-யிடம் மத்திய அரசு title=

வருவாய் இல்லாமல், நிறுவனங்கள் மட்டுமின்றி பொது மக்களும் அவதிபட்டு வருகின்றனர்.

இதனால் கடன்கள் அடைக்க முடியாமல் திணறியவர்களுக்கு உதவும் வகையில், கடன் தவணை ஒத்திவைப்பு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. முதலில் 3 மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டஇந்த சலுகை, மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த மாதத்துடன் இந்த கடன் தவணை சலுகை முடிவடைகிறது. 

இந்நிலையில் கடன் தவணை சலுகையை இரண்டு வருட காலத்திற்கு நீட்டிக்க முடியும் என்று அரசு செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, கடன் தவணை சலுகையை இரண்டு வருட காலத்திற்கு நீட்டிக்க முடியும் என்று நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான உச்சநீதிமன்ற பிரிவிடம் தெரிவித்தார்.

இருப்பினும், மத்திய அரசும்  ரிசர்வ் வங்கியும் கொரோனா தாக்கத்தினால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளன.

கடன் தவணை ஒத்திவைப்பு காலத்தை நீட்டிக்கக் கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  பிரச்சினைகளை தீர்க்காமல் நீண்ட காலத்திற்கு இழுக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க | இந்த மாதத்துடன் முடிவடையும் கடன் தவணை சலுகையை ரிசர்வ் வங்கி நீட்டிக்குமா?

கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மேத்தா உச்ச நீதிமன்ற பிரிவிடம் தெரிவித்தபோது, ​​கொரோனா நெருக்கடி காரணமாக, கடன் தவணை ஒத்தி வைக்கப்பட்ட இடைப்பட்ட காலக்கட்டத்தில் கூடுதல் வட்டி வசூலிப்பது குறித்து தகவல்களை வழங்குமாறு நீதிமன்றம் கூறியது. இருப்பினும். இதற்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவை என மேத்தா கோரினார்.

கோவிட் -19 லாக்டவுனுக்கு மத்தியில் ஒத்தி வைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கப்படுவது தொடர்பான மனுக்களை புதன்கிழமை விசாரிப்பதாக நீதிமன்ற பிரிவு கூறியது.

கொரோன காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.

மேலும் படிக்க | SBI PPF கணக்கு: வருமான வரிச்சலுகையுடன் கூடிய மிகச்சிறந்த சேமிப்பு திட்டம்...!!!

Trending News