Pensioners Latest News: மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வூதியதாரர்களுக்கான சமீபத்திய புதிப்பிப்பு ஒன்று உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு, ஓய்வூதியர்களுக்கான 6 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் சார்பில் நீதிமன்றம் எதிர்கொண்ட சில வழக்குகளின் அடிப்படையில் இந்த கேஸ் ஸ்டடி தயார் செய்யப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஓய்வூதியத்தில் திருத்தம், உயர் ஓய்வூதியம் (Higher Pension), ஜிபிஎஃப் (GPF), பணிக்கொடை (Gratuity) என 6 ஆய்வறிக்கைகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது. அவை ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆய்வறிக்கைகளை பற்றி இங்கே விரிவாக காணலாம்.
- Pension Revision: ஓய்வூதியத் திருத்தம் (ஆறாவது ஊதியக் குழுவின் கீழ்)
2006 ஆம் அண்டுக்கு முன் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை கணக்கிடுவதில் முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஆறாவது ஊதியக் குழுவின் (6வது CPC) படி, கடைசியாக பெற்ற ஊதியத்தின் 50% என்ற அடிப்படையில் ஓய்வூதியம் திருத்தப்பட வேண்டும். ஆனால் சில ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச ஊதிய பேண்டின் படி தங்கள் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
வழிகாட்டுதல்:
இது குறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ஓய்வூதியத்தை இரண்டு வழிகளில் கணக்கிட்டு அதிகபட்ச தொகை முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
1. கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% மற்றும்
2. குறைந்தபட்ச ஊதியம் + தர ஊதியத்தில் 50%.
CAT உத்தரவுக்குப் பிறகு, மத்திய அரசு அதை அமல்படுத்தியது. இந்த வழிகாட்டுதல்கள் 2006க்கு முந்தைய ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் சமமான ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.
- Service Period: சேவை காலம் மற்றும் ஓய்வூதியத் தகுதி
சில ஊழியர்களின் பணிக்காலம் குறைந்தபட்ச வரம்பான 10 ஆண்டுகளை எட்டாத நிலையில், அவர்கள் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்களாகிறார்கள்.
வழிகாட்டுதல்:
CCS (ஓய்வூதியம்) விதிகள், 1972 இன் விதி 49(1) இன் கீழ், குறிப்பிட்ட சில மாதங்களுக்கான சேவை காலம் ஒரு முழுமையான ஆண்டாகக் கருதப்படும். பணி இடைநிறுத்தம் அல்லது ஊதியம் இல்லாத விடுப்பு காலமும் சேவைக் காலத்தில் சேர்க்கப்படும்.
விளைவு:
இதன் மூலம், குறைந்தபட்ச சேவைக் காலத்தை முடிக்காத ஊழியர்களும் ஓய்வூதிய பலனைப் பெறுவார்கள்.
- Pension: தாமதமாக பணம் செலுத்தப்பட்டால் வட்டி வழங்குதல்
ஓய்வூதிய பலன்கள் (ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவை) வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சில நேரங்களில் ஓய்வூதியம் பெறுவோர் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.
வழிகாட்டுதல்கள்:
CCS (ஓய்வூதியம்) விதிகள், 1972 இன் விதி 68 இன் படி, 3 மாதங்களுக்கு மேல் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், 6% வட்டி வழங்க வெண்டியது கட்டாயமாகிறது. துறை ரீதியான அலட்சியத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
விளைவு:
இது ஓய்வூதியதாரர்களுக்கு சரியான நேரத்தில் அவர்களது ஓய்வூதிய தொகை மற்றும் பிற சலுகைகளுக்கான தொகை செலுத்தப்படுவதை உறுதி செய்வதோடு தாமதமான சந்தர்ப்பங்களில் துறை ரீதியான பொறுப்புணர்வையும் அதிகரிக்கும்.
- National Pension System: தேசியன் ஓய்வூதிய அமைப்பு (NPS) vs பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
NPS -இன் கீழ், இறந்த பணியாளரின் நிதி விநியோகம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி பற்றிய குழப்பம்.
வழ்ழிகாட்டுதல்கள்:
இறந்த ஊழியரின் குடும்பம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பலன்களைப் பெறுவார்கள். தகுதியான உறுப்பினர் இல்லை என்றால், NPS நிதி சட்டப்பூர்வ வாரிசுக்கு அனுப்பப்படும்.
விளைவு:
NPS மற்றும் OPS இடையே உள்ள தெளிவு காரணமாக இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்கப்படும்.
- General Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் உச்சவரம்பு
GPF இல் வருடாந்திர பங்களிப்பு வரம்பை (ரூ 5 லட்சம்) மீறுதல் மற்றும் அதற்கான வட்டி செலுத்துதல்.
வழிகாட்டுதல்:
GPF விலக்கு வரம்பை மீறினால், கூடுதல் விலக்கு நிறுத்தப்படும். அதிகப்படியான தொகைக்கு வட்டி வழங்கப்படும். ஆனால் அதற்கு வரி விதிக்கப்படும்.
GPF (மத்திய சேவைகள்) விதிகள், 1960ன் கீழ், அந்தந்த வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
விளைவு:
GPF செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கும் மற்றும் பணியாளர்களுக்கு பங்களிப்பு வரம்புகள் பற்றிய சிறந்த புரிதல் இருக்கும்.
- Gratuity: பணிக்கொடை செலுத்துதல் (தற்காலிக ஊழியர்களுக்கு)
தற்காலிக ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்குதல்.
வழிகாட்டுதல்:
தற்காலிக ஊழியர்களுக்கு அவர்களின் சேவை ஆண்டுகளின் அடிப்படையில் பணிக்கொடையின் பலன் கிடைக்கும். CCS (கிராசுட்டி பேமெண்ட்) விதிகள், 2021 வழக்கமான ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
விளைவு:
தற்காலிக பணியாளர்களுக்கு நியாயமான பணிக்கொடையின் பலன் கிடைக்கும்.
இந்த விரிவான வழக்கு ஆய்வு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளை தெளிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் தீர்வுகளுக்கான பாரபட்சமற்ற மற்றும் பயனுள்ள கட்டமைப்பையும் வழங்குகிறது. இந்த வழிகாட்டுதல்கள் நீதித்துறையின் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ