ரேஷன்-ஆதார் அட்டை இணைப்பது கட்டாயம்! மீண்டும் காலக்கெடுவை நீட்டித்தது மத்திய அரசு

Date Extended For Aadhar Linking: ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதன் மூலம் மோசடிகளைத் தடுக்கலாம், இந்த இணைப்பிற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 16, 2023, 07:41 PM IST
  • ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி?
  • உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு
  • இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது
ரேஷன்-ஆதார் அட்டை இணைப்பது கட்டாயம்! மீண்டும் காலக்கெடுவை நீட்டித்தது மத்திய அரசு title=

புதுடெல்லி: மானிய விலையில் உணவு தானியங்களை ஏழைகளை விநியோகம் செய்வதற்கான ரேஷன் கார்டுகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடைசி தேதி ஜூன் 30, 2023 ஆக இருந்தது. ரேஷன்-ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, தவறாமல், ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து விடவும்.  

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதன் மூலம் மோசடிகளைத் தடுப்பதோடு, பல்வேறு நன்மைகளையும் பெறலாம். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க முடியும்.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களைத் தவிர, ரேஷன் கார்டும், அடையாளம் மற்றும் நாம் வசிக்கும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இனி ஈஸியாக பெயர் சேர்க்கலாம்... ஆன்லைனிலும் ஆப்லைனிலும்!

உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்பு

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், பல ரேஷன் கார்டுகளை ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும். ரேஷன் அட்டையில் குறிப்பிட்ட வரம்புக்கு மேல் வருமானம் இருப்பவர்களையும் சுலபமாக அடையாளம் காணமுடியும்.

ரேஷனுக்குத் தகுதியற்ற நபர்களின் அட்டைகளை ரத்து செய்ய, ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது அரசுக்கு உதவியாக இருக்கும்.

தகுதியானவர்களுக்கே மானியம் கிடைக்கும்

தகுதியான நபர்கள் மட்டுமே மானிய விலையில் எரிபொருள்/உணவு தானியங்கள் ஆகியவற்றைப் பெறுவதையும் ரேஷன் - ஆதார் அட்டைகளை இணைப்பதால் உறுதி செய்ய முடியும். இது தகுதியானவர்கள் மட்டுமே மானிய விலையில் எரிபொருள் அல்லது உணவு தானியங்களைப் பெறுவதை உறுதி செய்யும்.

இந்த இணைப்பு,  நேர்மையற்ற இடைத்தரகர்களைத் தடுக்க உதவுகிறது, உண்மையான மற்றும் தகுதியான பயனாளிகள் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி கோதுமை, அரிசி கிடைக்காது

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க தேவையான ஆவணங்கள்

ரேஷன் கார்டின் நகல்

குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை நகல்

குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை நகல்

வங்கி பாஸ்புக் புகைப்பட நகல்

குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு

மேலும் படிக்க | மத மாற்றத்துக்கு தடையில்லை! மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கர்நாடக அரசின் முடிவு

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி?

அருகிலுள்ள பொது விநியோக அமைப்பு (Public Distribution System) மையம் அல்லது ரேஷன் கடையில் தேவைப்படும் ஆவணங்களை எடுத்துச் சென்று ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்கலாம்.  

உங்கள் வங்கிக் கணக்கு இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், பாஸ்புக்கின் நகலைச் சமர்ப்பிக்கவும்

ஆதார் அட்டை எண்ணின் நகலுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்

ஆதார் அங்கீகாரத்திற்கான பயோமெட்ரிக் தரவுகளுக்கான கைரேகைளை அதிகாரிகள் எடுத்துக் கொள்வார்கள்

தேவைப்படும் ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்ச்செய்தி அனுப்பப்படும்.

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண் இணைந்ததும், இணைக்கப்பட்டது தொடர்பான குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும்.  

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அலர்ட், உடனடியாக இந்த செய்தியை படியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அலர்ட், உடனடியாக இந்த செய்தியை படியுங்கள் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள். முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ

Trending News