Cash Transactions Notice: வருமான வரித்துறை, வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், தரகர் தளங்கள் போன்ற பல்வேறு முதலீட்டு தளங்கள் பொதுமக்களுக்கான பண பரிவர்த்தனை விதிகளில் சில கடுமையான மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி தற்போது இந்த முதலீட்டு மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மக்களை ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே பண பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கின்றன, இந்த வரம்பை மீறுபவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப நேரிடும். வங்கிகள், பரஸ்பர நிதிகள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்து பதிவாளர்களுடன் நீங்கள் பெரிய பண பரிவர்த்தனைகளை செய்தால், அவர்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
வங்கி ஃபிக்சட் டெபாசிட்:
வங்கி எஃப்டியில் ரொக்க வைப்புத்தொகை ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஃப்டிக்களில் தனிநபர் டெபாசிட் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறுகிறதா என்பதை வங்கிகள் வெளியிட வேண்டும்.
சேமிப்பு கணக்கு டெபாசிட்:
வங்கி சேமிப்பு கணக்கில் ரொக்கமாக டெபாசிட் செய்வதற்கான வரம்பு ரூ.10 லட்சம். சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அவர்களுக்கு வருமான வரித் துறை வருமான வரி நோட்டீஸ் அனுப்பக்கூடும். இதுதவிர கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருந்தால் அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். நடப்பு கணக்குகளில் வரம்பு ரூ.50 லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்:
சிபிடிடி விதிகளின்படி, கிரெடிட் கார்டு பில்களுக்கு ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் செலுத்தினால் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்ய ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை செலுத்தப்பட்டால், அந்த தொகையை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் விற்பனை அல்லது வாங்குதல்:
ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள அசையா சொத்தை வாங்கியோ அல்லது விற்பனையோ செய்திருந்தால், சொத்துப் பதிவாளர் வரி அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். எனவே, எந்தவொரு ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது, வரி செலுத்துவோர் தங்கள் பணப் பரிவர்த்தனைகளை படிவம் 26AS-ல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் மற்றும் பத்திரங்களில் முதலீடு:
மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் அல்லது கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் ஒரு நிதியாண்டில் ரொக்க பரிவர்த்தனைகள் ரூ. 10 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் அதிகளவில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் குறித்த தகவலை வருமான வரி அதிகாரிகள் சேகரித்து வைக்கின்றனர்.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு மாஸ் தகவல்: இந்த திட்டங்கள் மூலம் மாதம் ரூ. 70,500 ஈட்டலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ