வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!

EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள உங்கள் பணத்திற்கான வட்டியை எப்படி கணக்கிடலாம்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2024, 06:48 PM IST
  • பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கீடு!
  • சுலபமாய் வட்டியை கணக்கிடும் முறை
  • ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி
வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்! title=

இந்தியாவின் மிகச் சிறந்த ஓய்வூதியத் திட்டமான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF)  1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கொடுக்கிறது. அதில் அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தருகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள உங்கள் பணத்திற்கான வட்டியை எப்படி கணக்கிடலாம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  

இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளின் வட்டி, அவரவர் வங்கிக் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும். வட்டியை கணக்கிடுவதற்கான சுலபமான முறையை தெரிந்துக் கொள்வோம்.

இபிஎஃப் கணக்கில் 5 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

இபிஎஃப் வட்டி விகித கணக்கீடு

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை ஈபிஎஃப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு முடிவு செய்கிறது. இந்த ஆண்டு வட்டி 8.25 சதவீதமாக இருக்கும். 2022-23 நிதியாண்டில் EPF வட்டி 8.15 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, சென்ற ஆண்டை விட, ஓய்வூதியதார்களுக்கும், கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் நடப்பு ஆண்டில் அதிக வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | PF கணக்கில் தவறாக இருக்கும் பிறந்த தேதியை சரிசெய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

சம்பளத்தில் இருந்து PF கழிப்பு
இபிஎஃப்ஓ சட்டத்தின்படி, ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் டிஏவில் 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் கணக்கு வைத்திருப்பவருக்கு வேலை கொடுத்துள்ள முதலாளியும் 12 சதவீத பங்களிப்பை ஊழியரின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்.

நிறுவனத்தின் பங்களிப்பில், 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது மற்றும் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும்.  உங்கள் இபிஎஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து, அதற்கு 8.25 சதவீத வட்டி கிடைத்தால், ஒரு வருடத்தில் உங்கள் வட்டி 41,250 ரூபாய் வட்டி கிடைக்கும.

EPF வட்டி கணக்கீடு
கடந்த நிதியாண்டில் உங்கள் EPF கணக்கில் மொத்தம் ரூ.10 லட்சம் இருப்பு இருப்பதாக வைத்துக்கொள்வோம், வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்தால் உங்களுக்கு ரூ.81,500 வட்டி கிடைத்திருக்கும். இபிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அதிகரித்தால், இந்த ரூ.10 லட்சத்துக்கு ரூ.82,500 வட்டி வரவு வைக்கப்படும். எனவே வட்டி விகிதக் கணக்கீடு என்பது, EPFO ​​ஆல் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தையும் உங்கள் கணக்கில் உள்ள இருப்பின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்.

 EPF இருப்பு மற்றும் வட்டியை ஆன்லைனில் சரிபார்ப்பது மிகவும் எளிமையானது தான். உமாங் ஆப் அல்லது EPFO ​​போர்ட்டலில் இந்தத் தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.

EPFO போர்ட்டல் முகவரி www.epfindia.gov.in. இதில் உள்நுழைந்து, E-PassBook என்றத் தெரிவை கிளிக் செய்யவும். அதன்பிறகு தோன்றும் திரையில் அதில் உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடுங்கள். கணக்கில் உள்நுழைந்த பிறகு, பாஸ்புக்கிற்கான உறுப்பினர் ஐடி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். https://passbook.epfindia.gov.in/ என்ற இணையதளத்தில் பாஸ்புக்கை நேரடியாக அணுகலாம்.

மேலும் படிக்க | இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News