EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ்

EPFO Wage Cieling Hike: மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 23, 2024, 08:53 AM IST
  • இந்த திட்டத்தில் சேர்க்கப்படவுள்ள அம்சங்கள் என்ன?
  • சம்பளம் மற்றும் பிஎஃப் -இல் உயர்வு எவ்வளவு இருக்கும்?
  • ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படவுள்ள தாக்கம் என்ன?
EPFO உறுப்பினர்களுக்கு பம்பர் செய்தி: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், புதிய அரசு அமைந்தவுடன் குட் நியூஸ் title=

EPFO Wage Cieling Hike: மாத சம்பளம் பெறும் ஊழியரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அரசாங்கம் ஊழியர்களுக்கான ஒரு பெரிய திட்டத்தை உருவாக்கவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பது மட்டுமின்றி, பிஎஃப் தொகையும் உயரும். 

புதிய திட்டம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் கீழ் சமூகப் பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிப்பதில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய படியாக கருதப்படுகின்றது. இந்த திட்டத்தில் சேர்க்கப்படவுள்ள அம்சங்கள் என்ன? சம்பளம் மற்றும் பிஎஃப் -இல் உயர்வு எவ்வளவு இருக்கும்? ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படவுள்ள தாக்கம் என்ன? இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கவுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) கீழ் சமூக பாதுகாப்பின் நோக்கத்தை அதிகரிக்க ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, குறைந்தபட்ச சம்பள வரம்பு அல்லது பிஎஃப் கணக்கில் பங்களிப்புக்கான அடிப்படை சம்பளம் ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்படக்கூடும். அதாவது அதிகபட்ச தொகை பிஎஃப் கணக்கு (PF Account) மற்றும் பென்ஷன் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது

இதற்கான கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த நடவடிக்கையால் பல ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேறும். இதுகுறித்த அனைத்து வழிகளும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக புதிய அரசாங்கம் அமைந்தவுடன் முடிவெடுக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்

பல மாநிலங்களில் அதிகபட்ச சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை இருப்பதால், சம்பள வரம்பு அதிகரிக்கப்பட்டால் அதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். தற்போதைய சம்பள வரம்பு காரணமாக, இந்தத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் ஏதும் கிடைக்காமல் உள்ளனர்.

மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!

இதற்கு முன் ஊதிய வரம்பு எப்போது மாற்றப்பட்டது?

இதற்கு முன்னர் EPFO இன் கீழ் சம்பள வரம்பு கடந்த 2014 இல் மாற்றப்பட்டது. அப்பொது இந்த வரம்பு ரூ 6,500 லிருந்து ரூ 15,000 ஆக உயர்த்தப்பட்டது.

ESIC இல் சம்பள வரம்பு என்ன?

ESIC இல் சம்பள வரம்பு EPFO ​​ஐ விட அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2017 முதல், ESIC இன் சம்பள வரம்பு ரூ.21,000 ஆக இருக்கின்றது. இரண்டு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழும் ஒரே மாதிரியான சம்பள வரம்புகளை உருவாக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாளர்கள் மற்றும் முதலாளிகளின் பங்களிப்பு

தற்போதைய விதிகளின்படி, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பினரும், இபிஎஃஒ கணக்கில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளில் 12% என்ற சமமான பங்களிப்பை அளிக்கின்றனர். இதில் ஊழியர்களின் முழு பங்களிப்பும் PF கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில், 3.67% பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் (EPF), 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS) செல்கிறது.

சம்பள உயர்வின் தாக்கம்

- ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.21,000 ஆக இருந்தால், ஊழியரின் பிஎஃப் பங்களிப்பு ரூ.2,520 ஆக இருக்கும்.
- தற்போது இது ரூ.1,800 ஆக உள்ளது.
- நிறுவனமும் சமமான பங்களிப்பை வழங்கும்.
- இதன் விளைவாக நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.1,749 ஓய்வூதியக் கணக்கிற்குச் செல்லும், ரூ.771 பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் ஒரு பொதுவான தகவல் மட்டுமே. இவை அனைத்தும் முன்மொழியப்பட்டுள்ளன, இன்னும் செயல்படுத்தப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க பரிந்துரைக்கப்படுகின்றது.)

மேலும் படிக்க | கோடீஸ்வரர் ஆன முன்னாள் தூய்மை பணியாளர்! பணக்காரர் ஆக, ‘இதை’தான் செய்தாராம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News