Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?

Budget 2024: இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. முக்கியமாக, வரி முறைகளில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 13, 2024, 05:33 PM IST
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையை ஜூலை 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குவார் என எதிர்பார்க்கபப்டுகின்றது.
  • வரி செலுத்துவோர் பல அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்.
  • இரு வரி விதிப்பு முறைகளிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?  title=

Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெடை தாக்கல் செய்யவுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் உரையை ஜூலை 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குவார் என எதிர்பார்க்கபப்டுகின்றது. பட்ஜெட் உரை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களான தூர்தர்சனின் சன்சத் டிவியில் ஒளிபரப்பப்படும். அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களிலும் இது நேரடியாக ஒளிபரப்பப்படும். இது மோடி 3.0-ன் முதல் முழு பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நிர்மலா சீதாராமன், மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிப்பார் . தேசாய் ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 

Union Budget 2024: எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. முக்கியமாக, வரி முறைகளில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. வரி விலக்குகள், வரி அடுக்குகளில் மாற்றம், ஸ்டேண்டர்ட் டிடக்ஷன் வரம்பில் மாற்றம் ஆகியவை முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன. இவை தவிர இந்த பட்ஜெட்ட்டில் பழைய மற்றும் புதிய வருமான வரி முறைகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை:

- இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

- இரண்டு வரி விதிப்பு முறைகளிலும் பிரிவு 80EEB இன் கீழ் விலக்குகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது அடுத்த கட்டத்தை நோக்கிய ஒரு சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

- இது வரி செலுத்துவோரை (Taxpayers) கணிசமாக ஊக்குவிக்கும். 

- மின்சார வாகனங்களை வாங்குவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரையிலான விலக்குக்கு இந்த ஏற்பாடு அனுமதிக்கிறது.

புதிய வரி முறை 

- ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை சம்பளம் பெறும் தனிநபர்களுக்கான வரி விகிதத்தை அரசாங்கம் திருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

- தற்போது இது 30% ஆக உள்ளது.

- இதை 22% -25% ஆகக் குறைப்பது, இந்த வருமான வரம்பிற்குள் வரும் வரி செலுத்துவோர் மீதான வரிச் சுமையைக் குறைக்கும்.

- இது அவர்களுக்கு கணிசமான நிவாரணத்தை வழங்கும்

பழைய வரி முறை

- தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஒத்திசைக்கும் வகையில், நியாயத்தை நிலைநிறுத்த பழைய வரி விதிப்பு முறையில், வருமான வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் மாற்றம் செய்வது அவசியம்.

- அதிக வரி விகிதங்கள் பொருந்தும் வரம்புகள் மறுபரிசீலனை செய்யப்படலாம்.

- அல்லது வரிச்சுமையை சமமாக விநியோகிக்க புதிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தலாம். 

மேலும் படிக்க | கணவன்-மனைவி, தந்தை-மகனுக்கு இடையில் பண பரிமாற்றம் செய்தாலும் வருமான வரி நோட்டீஸ் வருமா?

புதிய வரி முறை: வரி அடுக்குகள்:

- 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.

- ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி விதிக்கப்படுகிறது.

- ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரி விதிக்கப்படும்.

- ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரி விதிக்கப்படுகிறது.

- ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி விதிக்கப்படுகிறது.

- ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வரி விதிக்கப்படுகிறது.

பழைய வரி முறை: வருமான வரி அடுக்குகள்

- ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு உண்டு.

- ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்படுகிறது.

- ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி விதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: ரயில் டிக்கெட் கட்டண சலுகை மீண்டும் வருகிறதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News