Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?

Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2024, 02:40 PM IST
  • பட்ஜெட்டில் சில குறிப்பிட்ட துறைகள், அம்சங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது.
  • அதில் பெண்களுக்கான நலப்பணிகளும் அடங்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன? title=

Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழு அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கான பணிகளை செய்து வருகின்றனர். இதில் சில குறிப்பிட்ட துறைகள், அம்சங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகின்றது. அதில் பெண்களுக்கான நலப்பணிகளும் அடங்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். நிதி அமைச்சர் (Finance Minister), பட்ஜெட்டில் பெண்களை மையமாக வைத்து பல நடவடிக்கைகளை கொண்டு வரக்கூடும். பெண்களுக்கான அரசு மானியங்களை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படலாம். 

Union Budget 2024: 

சமையல் எரிவாயு மற்றும் பிற அத்தியாவசிய திட்டங்களுக்கான நேரடி பயன் பரிமாற்றங்கள் (DBT) போன்ற தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தலாம் என்றும் இதன் மூலம் பெண்களின் நிதிச் சுமைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பொது மருத்துவமனைகளுக்கு நிதியுதவி அதிகரிக்கப்படும் என்றும், பெண்களுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்த இலவச அல்லது மானியத்துடன் கூடிய சுகாதார பரிசோதனைகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) சமீபத்திய ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளித்த சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார். பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர், "கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முனைவு, வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தி கண்ணியத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. பெண் தொழில்முனைவோருக்கு முப்பது கோடி முத்ரா யோஜனா (MUDRA Yojana) கடன் வழங்கப்பட்டுள்ளது." என்று கூறினார்.

மேலும், 83 லட்சம் சுயஉதவி குழுக்கள் (SHG) ஒரு கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்கும் (Lakhpati Didis) நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana - PMAY) திட்டத்தின் கீழ் 70% க்கும் அதிகமான கிராமப்புற வீடுகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் கூறியுள்ளது. வெவ்வேறு தொழில்முனைவு முயற்சிகள் மூலம் தொழிலாளர்களில் பெண்களின் பங்கேற்பில் கணிசமான அதிகரிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.

மேலும் படிக்க | பாம்பு பண்ணை வைத்தால் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்! விஷப்பாம்புகள் விற்பனை படு ஜோர்!

பட்ஜெட் 2023

- 2023 பட்ஜெட்டில், 81 லட்சம் சுய உதவி குழுக்களாக (SHGs) கிராமப்புற பெண்களை அணிதிரட்டிய தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வெற்றியை நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். 

- பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய உற்பத்தி நிறுவனங்கள் அல்லது கூட்டுகளை நிறுவுவதன் மூலம் இந்தக் குழுக்களை அடுத்த கட்ட அதிகாரமளிப்பை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சர் வலியுறுத்தினார். அவர்கள் மூலப்பொருட்கள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, தரம், பிராண்டிங் மற்றும் தங்கள் தயாரிப்புகளுக்கான சந்தைப்படுத்தல் போன்ற வடிவங்களில் ஆதரவைப் பெறுவார்கள்.

- மூன்று கோடி பெண் விவசாயிகளுக்கு உதவும் வகையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் சிறு விவசாயிகளை ஆதரிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

- ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை நினைவுகூரும் வகையில், அரசாங்கம் புதிய ஒன் டைம் சிறுசேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது மார்ச் 2025 வரை இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழில் இரண்டு லட்சம் டெபாசிட் வசதி உள்ளது. ஒரு பெண்ணின் பெயரில் இரண்டு வருட காலத்திற்கு இந்த கணக்கை திறக்கலாம். இதன் வட்டி விகிதம் 7.5 சதவீதம். இதில பகுதியளவு தொகையை எடுக்கும் வசதியும் உள்ளது. 

- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு (MoWCD) நிதி ஒதுக்கீடும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. அமைச்சகத்திற்கான பட்ஜெட் ரூ.267 கோடி உயர்ந்துள்ளது. 2022-23ல் ரூ.25,172.28 கோடியாக இருந்த தொகை 2023-24ல் ரூ.25,448.75 கோடியாக உயர்ந்தது, இது 1.08% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

2024 பட்ஜெட்டிலும் பெண்களுக்கான முக்கியமான சில அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வரி விலக்கு, சுய உதவிக்குழுக்கள், சுகாதார வசதிகள், சிகிச்சைக்கான செலவுகள், மானியங்கள், கல்வி என இந்த அம்சங்களில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்க | EPFO அளித்த மாஸ் GIS அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News