பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோ

Budget 2024: பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2024, 06:57 PM IST
  • மிஷன் ஷக்தியின் கீழ் உள்ள பட்ஜெட் உதிக்கீட்டை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
  • இது முன்னர் இருந்த 2,325 கோடி ரூபாயிலிருந்து 3,146 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • நமோ ட்ரோன் தீதி திட்டத்திற்கு நிதியமைச்சர் 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்.
பட்ஜெட்டில் பெண்களுக்கு வந்த முக்கிய அறிவிப்புகளை கவனித்தீர்களா? முழு லிஸ்ட் இதோ title=

Budget 2024: இந்த மாதம் 23ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. எனினும் சில முக்கிய அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகின. பெண்களுக்கான பலவித ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். பெண்கள் முன்னேற்றத்திற்கான நலத்திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

பெண்கள் சார்ந்த முன்னேற்றம்

பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் நலத்திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெண்களுக்கான விடுதிகள், குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றுக்கான முக்கிய அறிவிப்புகளையும் நிதி அமைச்சர் (Finance Minister) வெளியிட்டார்.  பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்காக வெளியிடப்பட்ட சில முக்கிய அறிவிப்புகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பெண்கள் சார்ந்த திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்கள் சார்ந்த திட்டங்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான கொள்கைகள் ஆகியவற்றுக்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்கான திட்டங்கள்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நிர்பயா நிதி பரிமாற்றத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 2024 நிதியாண்டில் ரூ.100 கோடியில் இருந்து 2025ஆம் நிதியாண்டில் ரூ.200 கோடியாக இரட்டிப்பாக்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை பலாத்கார வழக்குக்கு பதிலளிக்கும் வகையில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் நிர்பயா நிதி நிறுவப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டில் பெண்களின் பாதுகாப்புக்கான அனைத்து திட்டங்களுக்குமான ஒதுக்கீடு 1,105 கோடி ரூபாயாக உள்ளது.

பத்திரப்பதிவு

பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister) மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார். நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களில் இந்த சீர்திருத்தம் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற்றப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

'தொடர்ச்சியாக அதிகமான பத்திரப்பதிவு கட்டணங்களை வசூலிக்கும் மாநிலங்கள், அனைவருக்கும் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க ஊக்குவிப்போம். மேலும் பெண்களுக்கான பத்திரப்பதிவு கட்டணங்களை குறைப்பதற்கும் பரிசீலனை செய்வோம். இந்த சீர்திருத்தங்கள் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களின் முக்கியமான ஒரு அங்கம் ஆக்கப்படும்' என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

நமோ ட்ரோன் தீதி (Namo Drone Didi)

பெண்களின் பணியாளர் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் பெண்களை மையமாகக் கொண்ட திறன் வளர்ச்சி திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பெண்களின் சுய உதவிக் குழுக்களான (SHG) சந்தை அணுகல் ஊக்குவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நமோ ட்ரோன் தீதி திட்டத்திற்கு நிதியமைச்சர் 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 15,000 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும்.

மேலும் படிக்க | NPS விதிகளில் மாற்றம்: மாத ஓய்வூதியம், ஓய்வூதிய நிதியில் 40% ஏற்றம்

மிஷன் சக்தி

மிஷன் ஷக்தியின் (Mission Shakti) கீழ் உள்ள பட்ஜெட் உதிக்கீட்டை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இது முன்னர் இருந்த 2,325 கோடி ரூபாயிலிருந்து 3,146 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளிக்கும் பணிகளுக்கான திட்டமான மிஷன் சக்தியின் கீழ் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ, நாரி அதாலத் மற்றும் மகிலா போலீஸ் போன்ற திட்டங்கள் உள்ளன

கைம்பெண் இல்லம், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள், குழந்தைகளுக்கான கிரீச் வசதி

புதிய வேலைக்காகவோ அல்லது படிப்பதற்காகவோ பிற நகரங்களுக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பொருத்தமான வாடகை வீடுகளை கண்டுபிடிப்பதில் அதிக சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதை தீர்த்து வைக்க பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினருடன் இணைந்து இந்த விடுதிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, இதற்கான வசதிகளை நாங்கள் செய்வோம். தொழில்துறையிடம் இணைந்து பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளை அமைத்தல், குழந்தைகளுக்கான காப்பகங்களை அமைத்தல் ஆகியவற்றின் மூலம் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும்' என்று தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

இவை தவிர, சக்தி சதன் (ஸ்வதார், உஜ்ஜவாலா, விதவை இல்லம்), சகி நிவாஸ் (பணிபுரியும் மகளிர் விடுதி), பல்னா (தேசிய குழந்தைகள் காப்பக திட்டம்) போன்ற திட்டங்களை உள்ளடக்கிய SAMARTHYA -க்கான பட்ஜெட் ஒதுக்கீடு FY24 இல் ரூ.1,863.85 கோடியிலிருந்து FY25 -இல் ரூ.2,516 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: எவ்வளவு? எப்போது? இதோ விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News