Indian Railways முக்கிய அப்டேட்: டிக்கெட் புக்கிங்கில் புதிய வசதி.. பயணிகள் ஹேப்பி

Indian Railways: முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை வாங்க ரயில் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே ஒரு மிகப்பெரிய வசதியை அளித்துள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2023, 11:00 AM IST
  • ரயில்வே மூலம் மக்களுக்கு பல வகையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
  • ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதும் மக்களுக்கு எளிதாகி வருகின்றது.
  • ரயில்வே மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Indian Railways முக்கிய அப்டேட்: டிக்கெட் புக்கிங்கில் புதிய வசதி.. பயணிகள் ஹேப்பி title=

இந்தியன் ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

ரயில்வே மூலம் மக்களுக்கு பல வகையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வசதிகளின் கீழ், ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதும் மக்களுக்கு எளிதாகி வருகின்றது. இதற்கிடையில், ரயில்வேயில் இருந்து முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை வாங்க ரயில் பயணிகள் இப்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தலாம். UTS மொபைல் செயலியில் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யப்படாத, பிளாட்ஃபாரம் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை ரயில் பயணிகள் முன்பதிவு செய்யலாம்.

ரயில் டிக்கெட் 

எதிர்பாராத பயணம் ஏற்படும் போது, ​​முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை பெற, ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பது கடினமாக இருக்கும். மேலும், கூட்ட நெரிசலில் சரியான நேரத்தில் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் இந்திய ரயில்வேயின் யுடிஎஸ் மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, முன்பதிவு செய்யப்படாத, பிளாட்பாரம் மற்றும் அனைத்து ரயில்களுக்கும் சீசன் டிக்கெட்டுகள் போன்ற சில ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எளிதாகி விட்டது.

யுடிஎஸ்

இந்த ரயில் ஆப் Google Play Store அல்லது iOS இல் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. நீங்கள் ரயில் பிளாட்ஃபார்மில் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பதைத் தவிர்க்க விரும்பினால், முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டை மொபைலில் இருந்தே முன்பதிவு செய்ய விரும்பினால், இந்த UTS செயலியைப் பயன்படுத்தலாம்.

யுடிஎஸ் ஆப் மூலம் இந்த வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

- முதலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும். சைன் அப் செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும். UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் உங்கள் வாலட்டை ரீசார்ஜ் செய்ய மறக்காதீர்கள்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்! குறைந்தது ரயில் கட்டணம்.. புதிய கட்டணம் என்ன?

- ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, முதலில் காகிதமற்ற (பேப்பர்லெஸ்) அல்லது காகித (பேப்பர்) விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

- "புறப்படும் (Depart from)" மற்றும் "போகும் (Going to)" நிலையங்களை உள்ளிடவும்.

- இதைத் தொடர்ந்து ​​"கட்டணத்தைப் பெறு (Get fare)” என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். அதைக் கிளிக் செய்து, உங்கள் வாலட் தொகையிலிருந்து கட்டணத்தைச் செலுத்துங்கள் (UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்ற பிற கட்டண விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்).

- UTS பயன்பாட்டில் "ஷோ டிக்கெட்" விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் டிக்கெட்டுகளைப் பார்க்கலாம். சாதாரண முன்பதிவு கவுண்டரில் UTS செயலியில் ஒரு நோட்டிசில் கிடைத்த புக்கிங் ஐடி -ஐ பயன்படுத்தி பேப்பர் டிகெட்டை ப்ரிண்ட் செய்யலாம். 

காகிதமற்ற டிக்கெட்

காகிதமில்லா டிக்கெட் கேன்சல் செய்ய அனுமதிக்கப்படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். செயலியின் "ஷோ டிக்கெட்" அம்சத்தின் மூலம், பயனர் தனது டிக்கெட்டை TTE அல்லது TCயிடம் காட்டலாம்.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டில் வேறு ஒருவரின் பெயரா? என்ன செய்யலாம்? உடனே படியுங்கள்

Trending News