Indian Railway Rules For Confirm Seat: இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது ரயில்வே துறைதான். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்து வருகிறார்கள். ரயில்களில் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
ரயில்களின் பாதுகாப்பு வசதியாக இருக்கட்டும், ரயில் (Indian Railway) நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் சவுகரியங்கள் ஏற்படுத்தி கொடுப்பதாக இருக்கட்டும் என தொடர்ந்து ரயில்வே பல்வேறு அப்டேட்களை மேற்கொண்டு வருகிறது. ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் உள்ளன. அந்தவகையில் இந்திய ரயில்வே தற்போது புதிய விதி ஒன்று அமலுக்கு கொண்டு வந்துள்ளது அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
இந்நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை இருந்தும் உங்களால் ரயிலைப் பிடிக்க முடியாவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிற குழப்பம் பலறது மனதில் முக்கிய கேள்வியாக இருக்கும். ஆனால் இந்திய ரயில்வே (IRCTC) இது தொடர்பாக என்ன கூறுகிறது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
விதிகளைப் பின்பற்றவில்லை என்றால் IRCTC அபராதம் விதிக்கும்:
பொதுவாக ரயிலில் பயணம் செய்யும் போது, பயணிகள் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ரயில்வேயில் பல விதிகள் பின்பற்றப்படாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த விதிகள் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி அதில் ஒன்று தான் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் தொடர்பான விதிகள் ஆகும்.
ரயில் புறப்பட்ட பிறகு உங்களது இருக்கையையும் இழந்துவிடுவீர்களா?
ரயிலில் உங்கள் இருக்கை உறுதி செய்யப்பட்டு, சில காரணங்களால் நீங்கள் ரயிலைத் தவறவிட்டுவிடுகிறீர்கள் என்றால் ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையை முன்பதிவு செய்ய ஒரு விதி உள்ளது. ரயிலைத் தவறவிட்ட பிறகு, தங்கள் இருக்கைகளையும் இழக்க நேரிடும் என்று பயணிகள் நினைக்கிறார்கள், ஆனால் அப்படி இல்லை.
உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை பயணியின் பெயரில் எப்போது வரை இருக்கும்?
மாறாக பயணத்தின் அடுத்த இரண்டு நிலையங்கள் வரை ரயிலில் இருக்கைகள் முன்பதிவு இருக்கும். அதாவது, நீங்கள் விரும்பினால், அடுத்த நிலையத்திற்கு சென்று ரயிலைப் பிடிக்க முயற்சிக்கலாம். இரண்டு நிலையங்களையும் நீங்கள் தவறினால் TTE உங்கள் இருக்கையை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடலாம்.
அதேபோல் நீங்கள் புக் செய்த ரயில் டிக்கெட்டில் பயண தேதியை மாற்றுவது எப்படி என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்:
பொதுவாக ரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமும் நேரடியாக ரயில்வே கவுண்டரிலும் புக்கிங் செய்யலாம். ஆனால் இப்படியாகத் தேதியை மாற்ற ரயில்வே கவுண்டரில் மட்டுமே வழி இருக்கிறது. ஆன்லைனில் இதைச் செய்ய முடியாது. நீங்கள் புக்கிங் செய்த டிக்கெட் உடன் ரயில்வே கவுன்டருக்கு சென்று புக்கிங் செய்த தேதியிலிருந்து முன்னரே பின்னரோ மாற்றம் செய்து கொள்ளலாம். இது ரயில் கிளம்புவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வரை செய்து கொள்ள அனுமதியிருக்கிறது. அதன் பிறகு மாற்ற முடியாது. இந்த வாய்ப்பை ஒரு முறை மட்டுமே செய்து கொள்ள முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ