அடல் பென்ஷன் திட்டம் விதி மாற்றம்: அடல் பென்ஷன் திட்டத்தில் (APY) அரசாங்கம் ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, வருமான வரி செலுத்தும் ஒருவர் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவராவார்.அடல் பென்ஷன் திட்டம், நாட்டின் சமூகப் பாதுகாப்புத் துறையில் ஒரு மேலாதிக்கப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் முக்கியமாக அமைப்புசாரா துறை மக்களை மையமாகக் கொண்டது.
"அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. " இந்த பிரிவின் நோக்கிற்காக, 'வருமான வரி செலுத்துவோர்' என்ற சொற்றொடர், அவ்வப்போது திருத்தப்படக்கூடும் வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, வருமான வரி செலுத்த வேண்டிய நபர்களை குறிக்கும்"
அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணைந்த சந்தாதாரர், விண்ணப்பித்த தேதி அல்லது அதற்கு முன் வருமான வரி செலுத்துபவராக இருப்பது கண்டறியப்பட்டால், அடல் பென்ஷன் திட்ட கணக்கு மூடப்பட்டு, அந்த நாள் வரை திரட்டப்பட்ட ஓய்வூதியத் தொகை சந்தாதாரருக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியது.
அடல் பென்ஷன் திட்டத்தில் முக்கியமாக அவர்களின் வருமானம் மற்றும் நிதி சமூக நலன் ஆகியவற்றால் நிச்சயமான நிலை இல்லாதவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. அடல் பென்ஷன் திட்டம், 'அரசு உத்தரவாத திட்டமாக' கருதப்படுகிறது. இது வரி விலக்கு பலன்களையும் வழங்குகிறது. திட்டத்தில் பங்களிப்பவர்கள் பிரிவுகள் 80 CCC மற்றும் 80CCD ஆகியவற்றின் கீழ் கூடுதல் வரிச் சலுகைகளைப் பெறலாம்.
திட்டத்தில் சேரும் போது ஒருவர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். திட்டத்திற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 40 ஆகும்.
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், 18 வயது ஆன ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து, அடுத்த 42 ஆண்டுகளுக்கு (60 வயதாகும் வரை) ஒவ்வொரு மாதமும் ரூ.210 டெபாசிட் செய்யத் தொடங்கினால், அவர் ரூ. 5,000 (நிலையான) ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியுடையவராவார்.
அடல் பென்ஷன் திட்டத்தில் உள்ள வருமானம் சந்தா துவங்கும் காலத்திலேயே வரையறுக்கப்பட்டும்.
60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம்
60 வயதுக்குப் பிறகு இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்குகிறது. இதற்கு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது உங்கள் வயதைப் பொறுத்தது. APY இல் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ 1,000 மற்றும் அதிகபட்சமாக ரூ 5,000 பெறுவதற்கான விதிமுறை உள்ளது. எவ்வளவு சீக்கிரம் இதில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும்.
18 வயதில் திட்டத்தில் சேர, 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் ரூ.210 டெபாசிட் செய்ய வேண்டும். இதன் மூலம் 60 வயதுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் கிடைக்கும். அதேபோல், ரூ.1000 ஓய்வூதியம் பெற , ரூ.42, மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2000க்கு ரூ.84, ரூ.3000 ஓய்வூதியத்துக்கு ரூ.126, ரூ.4000 ஓய்வூதியத்துக்கு ரூ.168 என ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க |7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, முழு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ