மீண்டும் வருகிறது பழைய ஓய்வூதிய திட்டம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Old Pension: அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையை (ஓபிஎஸ்) மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 28, 2023, 12:04 PM IST
  • பழைய ஓய்வூதியத்தை வழங்க விவாதங்கள் நெடு நாட்களாக நடந்து வருகின்றது.
  • அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்க முடிவு.
  • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மீண்டும் வருகிறது பழைய ஓய்வூதிய திட்டம்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! title=

அரசு ஊழியர்கள் பலரும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். அதில் நீண்ட நாட்களாகவே மத்திய அரசு ஊழியர்கள் பலரும் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.  பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு விவாதங்கள் நெடு நாட்களாக நடந்து வருகின்றது.  இந்நிலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியினை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | சுகன்யா சம்ரித்தி யோஜனா: இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நிறுத்துங்கள்! பெரிய அப்டேட்

அதாவது அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இது தொடர்பான அதிரடி உத்தரவினை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.  இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.  ஆனால் இந்த நேரத்தில் குறிப்பிட்ட சில சிறப்பு நபர்களுக்கு மட்டுமே பழைய ஓய்வூதிய திட்டத்தின் பயன்கள் வழங்கப்படவுள்ளது, மற்றவர்களுக்கு இந்த திட்டம் இப்போது செயல்படுத்தவில்லை என்று கூறியுள்ளது.

டெல்லி உயர்நீதிமதின்றதின் உத்தரவின்படி, மத்திய துணை ராணுவப் படையினர் (சிஏபிஎஃப்) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  இது ஆயுதப்படை என்றும், இதன் மூலம் இவர்களுக்கு பழைய ஓய்வூதியத்தின் பலன்கள் கிடைக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.  பல ஓய்வூதிய திட்டத்தினை பெற இவர்களே தகுதியானவர்கள் என்றும் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினர் பெரியளவில் நிம்மதி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நீதிபதி சுரேஷ் கைத் மற்றும் நினா பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு 82 மனுக்கள் மீது தீர்ப்பளித்து.  இந்த முடிவின் விரிவான நகலை அரசு இன்னும் இணையதளத்தில் அப்லோட் செய்யவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு மன மகிழ்வை கொடுத்துள்ளது.  இறுதியாக எடுக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையிலேயே பழைய ஓய்வூதியத் திட்டம் கணக்கிடப்படுகிறது.  மேலும் இதில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது அகவிலைப்படியும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | பம்பர் செய்தி!! இனி இந்த ஊழியர்களுக்கு மீண்டும் Old Pension Scheme: அறிவிப்பு வெளியானது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News