Sunaina : சுனைனா காதலிக்கும் நபர் யார்? நடிகரா-தொழிலதிபரா?

Actress Sunaina : தமிழ் நடிகை சுனைனா, நேற்று தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த பதிவு பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில், அவர் காதலிக்கும் நபர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actress Sunaina : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த கதாநாயகிகளுள் ஒருவராக வலம் வருபவர், சுனைனா. இவர், கோலிவுட்டில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்னர் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். முதன் முறையாக நகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தொடர்ந்து அவருடன் ‘மாசிலாமணி’ படத்திலும் நடித்தார். எந்த காரணத்தினாலோ சில ஆண்டுகளுக்குள்ளையே மார்கெட்டை இழந்தார். இந்த நிலையில், இவர் நேற்று ஒருவருடன் கைக்கோர்த்திருப்பது போல பதிவிட்டிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

நகுலுடன் காதலில் விழுந்தேன்படத்தில் நடித்து அறிமுகமானவர், சுனைனா. அதன் பிறகு தொடர்ந்து அவருடனேயே ஜோடியாக மாசிலாமணி படத்திலும் நடித்தார். தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார். 

2 /8

மாடலாக இருந்து நடிகையாக மாறிய இவர், தனது நடிப்பிற்காக தமிழ் ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வாங்கியிருக்கிறார். வம்சம், நீர்ப்பறவை போன்ற படங்களில் இவரது நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

3 /8

விஷாலுடன் சமர் படத்ஹ்தில் நடித்த இவர், விஜய் ஹீரோவாக நடித்திருந்த தெறி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்தார். 

4 /8

திறமைமிகு நடிகையாக இருந்தாலும், எந்த காரணத்தினாலோ இவருக்கு பட வாய்ப்புகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கிடைக்காமல் போனது. 

5 /8

படங்களை விட்டுவிட்டு, நிலா நிலா ஓடி வா எனும் வெப் தொடரில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு சமுத்திரகனியுடன் சில்லு கருப்பட்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

6 /8

2022ஆம் ஆண்டு லத்தி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த இவர் அதன் பிறகு பெரிதாக படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரில் இவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. 

7 /8

சுனைனா, நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் யாருடனோ கைக்கோர்த்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த நபர் யார், அவரை எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் போன்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை.

8 /8

அந்த நபர், நடிகராகவோ அல்லது தொழிலதிபராகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. சுனைனாவும், கழுகு பட நாயகன் கிருஷ்ணாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு சுனைனா ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அவருடனும் பிரேக் அப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த புதிய காதலர் யார் என்று ரசிகர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.