OTT Releases : ஒரே நாளில் ஓஹோன்னு ஓடிடி ரிலீஸ்! எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Releases : வாரா வாரம் புதுப்புது படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

OTT Releases : இந்தியாவில், கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை பெருகி விட்டதால் பல்வேறு புது படங்களும் தொடர்களும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்களில் வெளியாகும்  புது வரவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்போமா? 

1 /11

மலையாளத்தில் ஹிட் அடித்த வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படம், சோனி லிவ் தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இந்த படம் திரையரங்கில் வெளியான போது நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. 

2 /11

ஷாரிக் ஹாசன் நடிப்பில் வெளியான படம், சிறகன். இந்த படத்தை டெண்ட் கொட்டா தளத்தில் நாளை முதல் (ஜூன் 7) பார்க்கலாம். 

3 /11

ஆப்ரேஷன் லைலா: ஸ்ரீகாந்த், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்திருந்த படம், ஆப்ரேஷன் லைலா. பேய் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை தமிழில் டெண்ட் கொட்டா தளத்தில் பார்க்கலாம். 

4 /11

மைதான்: அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான படம், மைதான். இந்த படத்தை, இந்தியில் அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். 

5 /11

ஹிட் மேன்: ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள சாகச திரைப்படம், ஹிட் மேன். இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

6 /11

ஹிட்லர் அண்ட் தி நாஸிஸ்: ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை வைத்து உருவாகியிருக்கும் தொடர், ஹிட்லர் அண்ட் தி நாஸிஸ். இந்த தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் காணலாம். 

7 /11

பூமர் அங்கிள்: ரோபோ சங்கர், ஓவியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பூமர் அங்கிள். இந்த படத்தை நாளை முதல் ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

8 /11

பாஸ்மா: அரபு மொழியில் உருவாகியிருக்கும் படம், பாஸ்மா. இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

9 /11

ஆபிகெய்ல்: இந்த வருடம் வெளியான பயங்கர பேய் த்ரில்லர் படங்களுள் ஒன்ரு, ஆபிகெய்ல். இந்த படத்தை பிஎம்எஸ் ஸ்ட்ரீம் எனும் தளத்தில் பார்க்கலாம். 

10 /11

105 மினிட்ஸ்: ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம், 105 மினிட்ஸ். இது ஒரு பேய் படமாகும். இந்த படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம். 

11 /11

பிற ஓடிடி தொடர்களும் படங்களும் :  >படே மியான் சோட்டே மியான் - இந்தி - நெட்ஃப்ளிக்ஸ் >கான்க்ரீட் யுடோஃபியா - கொரியன் - பிஎம்எஸ் ஸ்ட்ரீம்  >குல்கா சீசன் 4 - இந்தி - சோனி லிவ் >அண்டர் பாரீஸ் - ஃப்ரெஞ்ச் - நெட்ஃப்ளிக்ஸ் >ஹவ் டு ராப் அ பேங்க் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >ஹைரார்கி - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் >ஸ்வீட் டூத் சீசன் 3 - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >குப்ரா சீசன் 2 - டர்கிஷ் - நெட்ஃப்ளிக்ஸ்  >தி எண்ட் வி ஸ்டர்ட் ஃப்ரம் - ஆங்கிலம் - ஜியோ சினிமா