அரசு எடுத்த முக்கிய முடிவு, ஓய்வு பெறும் வயதில் பெரிய மாற்றம்

Retirement Age Update: தற்போது, ​​அகவிலைப்படி உயர்வை உயர்த்துவதற்கு முன்பே, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2023, 08:37 PM IST
  • எந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்ந்துள்ளது?
  • கூடுதலாக 3 வருடம் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கலாம்.
  • மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுத்த உத்தரவு.
அரசு எடுத்த முக்கிய முடிவு, ஓய்வு பெறும் வயதில் பெரிய மாற்றம் title=

ஓய்வு பெறும் வயதில் மாற்றம்: நாடு முழுவதும் இருக்கும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பில் அவ்வப்போது பெரிய பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அகவிலைப்படியை (DA hike) உயர்த்துவதற்கு முன்பே மாநில அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய செய்தியை வழங்கியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்த மாநில அரசு தற்போது திட்டம் வகுத்துள்ளது. ஆம்... தற்போது இந்த மாநிலம், அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு (retirement age) பெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

எந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படும்?
இந்த நிலையில் தற்போது இந்த மிகப்பெரிய முடிவை உத்தர் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு கூடிய விரைவில் அறிவிக்கலாம். உத்தர் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மருத்துவர்களின் ஓய்வு வயதை உயர்த்தி, விரைவில் அமல்படுத்தலாம் என, சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 62 ஆக உள்ள நிலையில் அதை 65 ஆக உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டில் புதிய விதி... கோடிக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும்!

கூடுதலாக இன்னும் 3 வருடம் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படலாம்
எனவே தற்போது டாக்டர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, யோகி அரசு இதுபோன்ற முடிவை எடுத்துள்ளது, விரைவில் இந்த உத்தரவு செயல்முறைப்படுத்தப்படும். இந்த உத்தரவு அமலானதும், உத்தர் பிரதேசத்தில் இதுவரை அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 62 ஆக இருந்த நிலையில், தற்போது ஊழியர்கள் கூடுதலாக மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டியிருக்கும்.

நோயாளிகளின் கஷ்டங்கள் நீங்கும்
இதனிடையே டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் எந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டாம் என்று முதல்வர் யோகி கூறினார். இதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் கட்டவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்
இது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் தகுதியான மற்றும் திறமையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எந்த இடத்திலும் எந்த பதவியும் காலியாக இருக்கக்கூடாது. மருத்துவமனைகளில் நிபுணத்துவ மருத்துவர்களின் இருப்பு மிகவும் முக்கியமானது என்றார். மேலும் தற்போது, ​​சிறப்பு மருத்துவர்கள் நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் பொது மருத்துவர்களின் சிறப்பு பயிற்சி மூலம் கிடைக்கின்றனர், ஆனால் எதிர்காலத்தில் மற்ற விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

நன்னடத்தை காலத்தில் அரசு மருத்துவர்கள் உயர்கல்வி பெற அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த காலகட்டத்தில் மருத்துவர்களுக்கு அசாதாரண விடுமுறை வழங்குவதற்கான முன்மொழிவை சுகாதாரத் துறை தயாரிக்க வேண்டும், என்றார்.

சுகாதாரத் துறையில் பணிபுரியும் பல உயர் நிறுவனங்கள், மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதற்காக மாநிலத்தின் ஆர்வமுள்ள மாவட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் தொகுதிகளில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். பின்தங்கிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு தனியார் முதலீட்டை ஊக்குவிக்க சுகாதாரத்துறை நல்ல கொள்கையை தயாரிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: 46% டிஏ ஹைக், அரியர் தொகையுடன் கிடைக்கும் அதிக சம்பளம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News