PPF, MF, POSS: ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் முதலீட்டு திட்டங்கள்

Best Saving Schemes: சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் இருப்பதால், எந்த முதலீட்டு விருப்பங்கள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் அதிக வருமானத்தை வழங்கக்கூடியவை என்பதை தீர்மானிப்பது கடினமான பணியாக இருக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2023, 08:19 PM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் முதலீட்டு விருப்பமாகும்.
  • இதில் நீங்கள் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவீர்கள்.
  • இது சிறு சேமிப்பு என்ற கருத்தில் செயல்படுகிறது.
PPF, MF, POSS: ஜாக்பாட் வருமானத்தை அள்ளித்தரும் முதலீட்டு திட்டங்கள் title=

நீண்ட காலத்திற்கான இலக்குடன் பணத்தை சேர்க்கும்போது தொடர் முதலீடு சிறந்த வழியாக இருக்கும். சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் இருப்பதால், எந்த முதலீட்டு விருப்பங்கள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் அதிக வருமானத்தை வழங்கக்கூடியவை என்பதை தீர்மானிப்பது கடினமான பணியாக இருக்கலாம். கணிசமான வருமானத்தை வழங்கும் சில சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் (POSS) ஆகியவை அடங்கும்.

சரியான முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் முதலீட்டு இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது. இந்த முதலீட்டு விருப்பங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund-PPF)

பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் முதலீட்டு விருப்பமாகும். இதில் நீங்கள் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவீர்கள். இது சிறு சேமிப்பு என்ற கருத்தில் செயல்படுகிறது. மேலும் காலப்போக்கில் கார்பஸ் நிதியை உருவாக்க ஒழுக்கமான முறையில் சேமிக்க உங்களை இது ஊக்குவிக்கிறது. ஒரு பிபிஎஃப் கணக்கிற்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கும். மற்ற விருப்பங்களுடன் ஒப்பிடும்போது இதில் முதலீடு பாதுகாப்பாக இருக்கும். ஏனெனில் இது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த முதலீடுகளுக்கு 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. இது குறுகிய காலத்தில் வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் அதிகமான கால அளவாக இருக்கலாம்.

பிபிஎஃப் முதலீடுகள் வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்குகளுக்கு தகுதியுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | EPFO Withdrawal Rules: பிஎஃப் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகள்

மியூசுவல் ஃபண்டுகள் (Mutual Funds - MFs)

மியூசுவல் ஃபண்டுகள் முதலீட்டு கருவிகள் ஆகும். அவை முக்கியமாக உங்கள் பணத்தை ஈக்விட்டி அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. பிபிஎஃப் மற்றும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புகள் உட்பட பல முதலீட்டு விருப்பங்களுடன் ஒப்பிடும்போது அவை அதிக வருமானத்தை வழங்குகின்றன. இருப்பினும், லாபகரமான வருமானம் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. மேலும் இதில் ஆபத்தும் அதிகமாக இருக்கும். சந்தை வீழ்ச்சி அல்லது பிற சாதகமற்ற காரணிகளின் போது முதலீட்டாளர் தனது நிதியை இழக்க நேரிடும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் உங்கள் பணத்தை பங்குச் சந்தையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து ஆபத்தைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.

மற்ற விருப்பங்களுடன் ஒப்பிடுகையில், மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக பணப்புழக்கத்தை வழங்குகின்றன. ஏனெனில் நீங்கள் உங்கள் முதலீடுகளை விற்று வருமானத்தை உடனடியாக பெறலாம். 

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் (Post Office Savings Schemes - POSS)

தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் (POSS) பல முதலீட்டு விருப்பங்களை உள்ளடக்கியது. இது முக்கியமாக சிறிய தொகையைச் சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. POSS முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள முதலீட்டு விருப்பங்களில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு, தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) மற்றும் இன்னும் பல திட்டங்கள் அடங்கும். இந்த விருப்பங்கள் வெவ்வேறு வட்டி விகிதங்களின் அடிப்படையில் வருமானத்தை வழங்குகின்றன.

அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு, பிரிவு 80C-ன் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்குகளைப் பெறலாம்.

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இணைய வங்கி சேவையை பயன்படுத்த இயலாது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News