Bank strike நாள் 2: இந்த வங்கிகள் இன்று மூடப்பட்டிருக்கும்! முழு லிஸ்ட் இங்கே!

Bank Strike Day 2: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மேற்கொண்ட இரண்டு நாள் வேலைநிறுத்த அழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் இன்று (மார்ச் 16) மூடப்பட்டிருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2021, 09:01 AM IST
Bank strike நாள் 2: இந்த வங்கிகள் இன்று மூடப்பட்டிருக்கும்! முழு லிஸ்ட் இங்கே! title=

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) மேற்கொண்ட இரண்டு நாள் வேலைநிறுத்த அழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் இன்று (மார்ச் 16) மூடப்பட்டுள்ளது. மார்ச் 15 மற்றும் மார்ச் 16 ஆகிய இரண்டு நாட்களில் வேலைநிறுத்தத்தில் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என்று சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு அரசுக்கு சொந்தமான கடன் வழங்குநர்களை தனியார்மயமாக்குவதற்கு எதிராக வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

வங்கி தொழிற்சங்கங்களுக்கும் மத்திய அரசிற்கும் (Central Government) இடையிலான சமரச சந்திப்பு தோல்வியுற்ற நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தொடர்ச்சியான நாட்களில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (Bank Strike) செய்வார்கள் என்று AIBEA வியாழக்கிழமை முன்னதாக கூறியது.

ALSO READ | SBI உட்பட அனைத்து அரசு வங்கிகளிலும் இந்த சேவைகள் பாதிக்கப்படும்!

வேலைநிறுத்தத்தால் வங்கி சேவை முழுமையாக பாதிக்கப்பட்டன. பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகள் முடங்கின. வங்கியின் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இதற்கிடையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBIவேலைநிறுத்தங்கள் குறித்து தனது வாடிக்கையாளர்களை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

தனியார் வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும்
தனியார் வங்கிகளான Axis Bank, HDFC Bank, ICICI Bank, போன்றவை இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது, இதனால் அவர்களின் வேலை நேரம் பாதிக்கப்படாது. இந்தியா முழுவதும் ஏடிஎம்கள் (ATM) செயல்படும்.

ALSO READ | BUDGET 2021: LIC பங்குகளை விற்பனை செய்ய முடிவு - LIC IPO 2022 இல் வர உள்ளது: நிர்மலா சீதாராமன்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News