மூத்த குடிமக்களுக்கு அசத்தலான வட்டி... சென்ட் கரிமா FD திட்டத்தில் இன்றே முதலீடு செய்யுங்கள்!

நீங்கள் அதிக வட்டியை கொடுக்கும் நிலையான வைப்புத் திட்டத்தில் (FD) முதலீடு செய்ய விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2023, 11:05 AM IST
  • சிறப்பு முதலீட்டு திட்டத்தில் யார் எல்லாம் முதலீடு செய்யலாம்?
  • சிறப்பு திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு, அதற்கு கொடுக்கப்படும் வட்டி.
  • டெபாசிட் செய்வதற்கான காலம் 777 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க முடியாது.
மூத்த குடிமக்களுக்கு அசத்தலான வட்டி... சென்ட் கரிமா FD திட்டத்தில் இன்றே முதலீடு செய்யுங்கள்! title=

Cent Garima Term Deposit Scheme: நீங்கள் அதிக வட்டியை கொடுக்கும் நிலையான வைப்புத் திட்டத்தில் (FD) முதலீடு செய்ய விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய வங்கி உங்களுக்காக ஒரு சிறப்பு  நிலையான கால வைப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதில், நீங்கள் 777 நாட்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதனால்  உங்களுக்கு 7.55 சதவீதம் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். இந்த டெர்ம் டெபாசிட் திட்டத்தின் பெயர் சென்ட் கரிமா டெர்ம் டெபாசிட் திட்டன் (Cent Garima Term Deposit Schem. இந்தத் திட்டம் தொடர்பான சிறப்பு அம்சங்களை  அறிந்து கொள்ளலாம்.

சிறப்பு முதலீட்டு திட்டத்தில் யார்  எல்லாம் முதலீடு செய்யலாம்?

எந்தவொரு இந்திய குடிமகனும் சென்ட் கரிமா நிலையான வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ( NRI) இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலீட்டு காலம்

சிறப்பு எஃப்டி திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கான காலம் 777 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க முடியாது.

வட்டி விகிதம்

இந்த சிறப்பு திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு, அதற்கு கொடுக்கப்படும் வட்டி. இதில் முதலீடு செய்தால் 7.55 சதவீத வட்டி கிடைக்கும். இந்த வட்டி பல வங்கிகளின் FD களில் கிடைக்கும் வட்டியை விட மிகவும் சிறந்தது வட்டி விகிதம் ஆகும்.

மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி

சென்ட் கரிமா ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில், மூத்த குடிமக்களும் 0.50 சதவீத கூடுதல் வட்டி விகிதத்தின் பலனைப் பெறுகிறார்கள், மற்ற பல நிலையான வைப்புத் திட்டங்களைப் போலவே மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழ்ங்கப்படுகிறது.

மேலும் படிக்க | நிச்சய லாபம், வரி விலக்கு, ஜாக்பாட் வருமானம்: நன்மைகளை அள்ளித்தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்

முதலீட்டு தொகை

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், குறைந்தபட்சம் ரூ.10,000 முதல், அதிகபட்சம் ரூ.10,00,00,000 வரை டெபாசிட் செய்யலாம். எனினும், முதிர்வுக்கு முன் பணத்தை எடுத்தால், 1 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்.

கடன் வசதி

இந்த மத்திய வங்கி திட்டத்தில் நீங்கள் கடன் வசதியையும் பெறுவீர்கள். உங்கள் டெபாசிட்டில் 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். கடன் தொகைக்கான வட்டி விகிதம் பொருந்தக்கூடிய பிளோடிங் வட்டி விகிதங்களை விட 1.00 சதவீதம் அதிகமாக இருக்கும். MIDR, QIDR, FDR, போன்ற வழக்குகளில், வட்டித் தொகை கடன் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு எதிராக நீங்கள் கடன் வாங்கியிருந்தால், முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி உங்களுக்குக் கிடைக்காது. இந்த திட்டத்தில் நாமினிகளை குறிப்பிடும் வசதியையும் பெறுவீர்கள்.

நிலையான வைப்பு திட்டத்தின் பலன் பெறுவது எப்படி?

மத்திய வங்கியின்  திட்டத்தின் பலனை நீங்கள் பெற விரும்பினால், ஆன்லைன்/நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங் மூலம் அதைப் பெறலாம் வங்கிக் கிளைக்குச் சென்று ஆஃப்லைனிலும் கணக்கைத் திறக்கலாம். கணக்கு திறக்கும் போது தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.  இது தவிர, திட்டத்திற்குப் பொருந்தக்கூடிய மற்ற அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும்.

மேலும் படிக்க | 25 வயதாகும் வரை மாத ஓய்வூதியம்: குழந்தைகளின் நலன் காக்கும் EPFO திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News