PNB Positive Pay System: மாறும் பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டண விதிகள்...

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய செய்தி, PNB இன் கட்டண விதிகள் ஏப்ரல் 4 முதல் மாறுகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 26, 2022, 06:39 PM IST
  • பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி
  • PNB இன் கட்டண விதிகள் ஏப்ரல் 4 முதல் மாறுகின்றன
  • காசோலை விவரங்களை வங்கிக்கு தெரிவிக்கவும்
PNB Positive Pay System: மாறும் பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டண விதிகள்... title=

PNB Positive Pay System: பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) வாடிக்கையாளர்களுக்கான கட்டண விதிகள் மாறப் போகின்றன. வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஏப்ரல் 4 முதல், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு காசோலை மூலம் பணம் செலுத்துவதற்கான Positive Pay System விதிகளை மாற்றப் போகிறது.

ஏப்ரல் 4 முதல், 10 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு Positive Pay System சரிபார்ப்பு கட்டாயம் என்று PNB தெரிவித்துள்ளது.

இந்த விவரங்கள் தேவைப்படும்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாஸிடிவ் பே சிஸ்டத்திற்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு எண், காசோலை எண்,  காசோலை தேதி, காசோலைத் தொகை, பயனாளியின் பெயர் போன்ற விவரங்களை வங்கிக்கு வழங்க வேண்டும்.

pnb

Positive Pay System சரிபார்ப்பு இல்லாவிட்டால், வங்கி காசோலைக்கு பணம் செலுத்தாது. காசோலை திரும்ப அனுப்பப்படும்.  

பாசிட்டிவ் பே சிஸ்டம் என்றால் என்ன?
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பாசிட்டிவ் பே சிஸ்டம் (PPS) பல்வேறு வகையான காசோலை கட்டண மோசடிகளில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.  வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் காசோலை விவரங்களை கிளையில் அல்லது டிஜிட்டல் சேனல்கள் மூலம் டெபாசிட் செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் வங்கியின் இணைய வங்கிச் சேவை, மொபைல் ஆப் பிஎன்பி ஒன் அல்லது எஸ்எம்எஸ் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

மேலும் தகவலுக்கு, PNB வாடிக்கையாளர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது 18001802222 அல்லது 18001032222 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

மேலும் படிக்க | வங்கி ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: தவறுகளை மன்னிக்க முடியாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News