5 ஆண்டுகளுக்கு ஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்பும் Air India

Leave without pay scheme (LWP) திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2020, 10:55 PM IST
  • Leave without pay scheme (LWP) திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது
  • கொரோனா பாதிப்பால் மார்ச் மாதத்தில் இருந்து விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன
  • மே 25 முதல் உள்நாட்டில் மட்டும் 50-60 சதவிகித அளவு விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது
5 ஆண்டுகளுக்கு ஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்பும் Air India title=

புதுடெல்லி: எல்.டபிள்யூ.பி எனப்படும் leave without pay scheme (LWP) திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பன்சலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது. "ஆறு மாதங்கள் அல்லது இரண்டு வருட காலத்திற்கு விடுமுறை கொடுக்கலாம், அது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய விடுப்பாக இருக்கும்" என்று இந்த நீண்ட கால விடுப்புக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ஐந்து ஆண்டுகள் வரை ஊதியம் இல்லாமல் (எல்.டபிள்யூ.பி) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுபவர்களை பட்டியலிடும் பணியும் தொடங்கிவிட்டன. வேலைத்திறன், ஆரோக்கியம் மற்றும் இதற்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்டவரா என்பது போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில், இந்த திட்டத்தின் கீழ் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய ஊழியர்களை அடையாளம் காணும் பணியை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.

அதன்படி, பணியாளர்களை ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊதியமில்லாத கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.  இருந்தாலும், அது ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். அது எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் மாற்றங்களை பொருத்து முடிவு செய்யப்படும்.   
ஜூலை 14 அன்று இந்த உத்தரவு அறிக்கையாக அனைவருக்கும் அனுப்பப்பட்டது.

"மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் பணியாளர்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அதோடு, கட்டாய விருப்பில் அனுப்பக்கூடிய எல்.டபிள்யூ.பி பணியாளர்களை அடையாளம் காண வேண்டும்" என்று தலைமையகத்தில் உள்ள துறைத் தலைவர்களுக்கும் பிராந்திய இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Also Read | தொழில்நுட்ப குறைபாடுகள் கொண்ட 1.35 லட்சம் கார்களுக்கு Maruti என்ன சொல்கிறது?

"கண்டறியப்பட்ட ஊழியர்களின் பெயர்கள், தலைமையகத்தில் பொது மேலாளருக்கு (பணியாளர்கள்) (General Manager (Personnel)) அனுப்ப வேண்டும். அதை பரிசீலித்து CMD தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்" என்றும் அந்த உத்தரவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளை எழுப்பியபோது, "இந்த விவகாரம் குறித்து நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துவிட்டார்.

கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வாழ்க்கை முறையையே புரட்டி போட்டிருக்கும் நிலையில், கோவிட் -19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக விமானத் துறை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் நஷ்டத்தை குறைப்பதற்காக ஊதியக் குறைப்பு, எல்.டபிள்யூ.பி மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது போன்ற செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் மாதத்தில் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மே 25 முதல் தொடங்கின.  ஆனால், உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து மட்டுமே தொடங்கின.  பன்னாட்டு விமானச் சேவைகள் தொடங்கப்படவில்லை.

Also Read | கொரோனா காலத்திலும் லாபமீட்டி பிரமிக்க வைக்கும் இன்ஃபோசிஸ்!!

உள்நாட்டு போக்குவரத்திலும் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த போக்குவரத்துச் சேவைகளில் அதிகபட்சம் 45 சதவீதம் மட்டுமே இயக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

மே 25 முதல் இந்திய உள்நாட்டு விமானங்களில் 50-60 சதவீதம் மட்டுமே பயணிகள் பயணிக்கிறனர். மார்ச் 23 முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. 

உலகிலிருந்து கொரோனா நுண்கிருமியின் தாக்கம் குறைந்தால் தான், விமானங்கள் முன்பு போல தங்கள் வான் பறப்புகளை மேற்கொள்ள முடியும். அதுவரையில், மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடப்பதைப் போலவே விமானங்களும் தங்கள் கேரேஜுகளிலேயே முடங்கியிருக்கும்.  அது மட்டுமல்ல, பணியாளர்களின் வேலைவாய்ப்பும் அதல பாதாளத்தை நோக்கி பயணிப்பதை தடுக்க முடியாது… 

Trending News