கூகிள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலியாக முதலிடத்தில் Telegram..!!!

டிசம்பர் மாதத்தில் கூகிள் பிளேயில் பதிவிறக்கம் செய்வதில் டெலிகிராம் ஒன்பதாவது இடத்தில் இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டால் இது ஒரு சாதனை அளவாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 7, 2021, 09:42 PM IST
  • டெலிகிராம் 2021 ஜனவரியில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத செயலியாக உள்ளது.
  • மொத்த பதிவிறக்கங்களில் 24 சதவீதம் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தோனேசியாவில் செய்யப்பட்ட பதிவிறக்க எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது.
கூகிள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலியாக முதலிடத்தில் Telegram..!!! title=

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை காரணமாக பலர் அதை பயன்படுத்த தயக்கம் காட்டியதுடன், அதிலிருந்து மாற வேண்உம் எனவும் விரும்பினர். கடந்த இரண்டு மாதங்களில் வாட்ஸ் அப்பிற்கு மாற்றாக உள்ள  சிக்னல் மற்றும் டெலிகிராமின் பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 

சென்சார் டவர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டெலிகிராம் (Telegram) இப்போது 2021 ஜனவரியில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத செயலியாக உள்ளது, மொத்த பதிவிறக்கங்களில் 24 சதவீதம் இந்தியாவில் (India) செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் செய்யப்பட்ட பதிவிறக்க எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது.

முந்தைய மாதமான டிசம்பர் 2020 இல் கூகிள் பிளே ஸ்டோரில் விளையாட்டு அல்லாத செயலியின் பதிவிறக்கங்களில் ஒன்பதாவது இடத்திலிருந்த டெலிகிராம் செயலி தற்போது முதலிடத்தை அடைந்துள்ளது. விளையாட்டு அல்லாத செயலியில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் 10 செயலியின் பட்டியலிலும் நுழைந்துள்ளது” என சென்சார் டவர் அறிக்கை கூறியது.

டிசம்பர் மாதத்தில் கூகிள் (Google) பிளேயில் பதிவிறக்கம் செய்வதில் டெலிகிராம் ஒன்பதாவது இடத்தில் இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டால் இது ஒரு சாதனை அளவாகும்.

ஜனவரி மாதத்தில் செய்யப்பட்ட பதிவிறக்கங்களில், டெலிகிராமிற்குப் பிறகு, டிக்டாக் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிக்னல் மற்றும் பேஸ்புக் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் புதிய தனியுரிமைக் கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அதன் பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையை ஏற்காதவர்கள் இனி செயலியை பயன்படுத்த முடியாது.

புதிய கொள்கையை ஏற்றுக்கொள்வது தொடர்பான நோடிஃபிகேஷனை பெற்ற பயனர்கள், இது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தனர். சில பயனர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராம் என்ற மற்றொரு தளத்திற்கு மாறலாம் என்று பரிந்துரைத்தனர்.

பலரும் தங்களது ஆன்லைன் தகவல்தொடர்பு தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுள்ள நிலையில், டெலிகிராம் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. 

ALSO READ | Xiaomi கொண்டு வரும் அசத்தல் சார்ஜர்; ஸ்மார்ட்போன் 10 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும்!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News