ஆதார்-பான் எண் இணைக்கப்பட்டுவிட்டதா? SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?

Aadhaar PAN link status: மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி மார்ச் 31, 2023-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், ஒரு நபருக்கு ஒதுக்கப்பட்ட பான் செயலிழந்துவிடும்.  

Written by - RK Spark | Last Updated : Mar 20, 2023, 11:51 AM IST
  • மார்ச் 31, 2023-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
  • எஸ்எம்எஸ் மூலம் ஆதார் பான் இணைப்பு நிலையை சரிபார்க்கலாம்.
  • 567678 அல்லது 56161 என்கிற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
ஆதார்-பான் எண் இணைக்கப்பட்டுவிட்டதா? SMS மூலம் சரிபார்ப்பது எப்படி? title=

Aadhaar PAN link status: மக்கள் தங்கள் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டை, ஆதார் கார்டுடன் மார்ச் 31ம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னர் இணைக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க தவறினால் பான் கார்டுகள் செயலிழந்துவிடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.  கடந்த மார்ச் 2022ம் ஆண்டில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மார்ச் 31, 2023-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், ஒரு நபருக்கு ஒதுக்கப்பட்ட பான் செயலிழந்துவிடும்.  கடந்த மார்ச் 9ம் தேதி புதன்கிழமையன்று, பங்குச் சந்தையில் தொடர்ச்சியான மற்றும் சுமூகமான பரிவர்த்தனைகளுக்கு மார்ச் இறுதிக்குள் அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால் பின்வரும் படிகளை பின்பற்றி அதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | முக்கிய அறிவிப்பு! இனி இந்த தொகைக்கு மேல் பணமாக பரிவர்த்தனை செய்ய முடியாது!

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் பான் இணைப்பு நிலையை சரிபார்த்தல்: 

1) UIDPAN என்று ஸ்பேஸ் விட்டு மெசேஜ் டைப் செய்யவேண்டும்.

2) 12 இலக்க ஆதார் எண்ணைத் தொடர்ந்து ஒரு இடைவெளியை உள்ளிட வேண்டும்.

3) 10 இலக்க நிரந்தர கணக்கு எண்ணை (பான்) உள்ளிட வேண்டும்.

"UIDPAN < 12 இலக்க ஆதார் எண்> < 10 இலக்க நிரந்தர கணக்கு எண்>" இந்த ஃபார்மேட்டில் உங்களது மெசேஜ் இருக்கும்.

4) 567678 அல்லது 56161 என்கிற எண்ணுக்கு அந்த மெசேஜை அனுப்ப வேண்டும்.

5) இப்போது நீங்கள் சேவையின் பதிலுக்காக காத்திருக்க வேண்டும்.

ஆதாருடன் பான் இணைக்கப்பட்டிருந்தால், "ஆதார்...ஏற்கனவே ஐடிடி தரவுத்தளத்தில் பான் (எண்) உடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் சேவைகளைப் பயன்படுத்தியதற்கு நன்றி" என்கிற செய்தி வரும்.  ஆதாருடன் பான் இணைக்கப்படவில்லை எனில், "ஆதார் ஐடிடி தரவுத்தளத்தில் பான் (எண்) உடன் இணைக்கப்படவில்லை" என்று செய்தி வரும்.

மேலும் படிக்க | தனது புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய யமஹா! என்ன என்ன சிறப்பம்சங்கள்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News