இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), இந்திய குடிமகன்கள் / குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று கூறியுள்ளது. அதன் படி சில சமயங்களில் இந்த ஆதார் அட்டையில் (Aadhaar Card) உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டி இருக்கும். ஆனால் இனி நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் ஆணயம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.
ஆனால் உங்கள் வீட்டின் குடும்பத் தலைவர், பயோமெட்ரிக் புதுப்பிப்பு போன்ற பிற மாற்றங்களுக்கு, நீங்கள் ஆதார் சேவா கேந்திரா (Aadhaar Seva Kendra) அல்லது புதுப்பிப்பு மையத்தைப் அணுக வேண்டும்.
ALSO READ | Aadhaar குறித்து சந்தேகமா? இந்த எண்ணில் டயல் செய்து உங்கள் மொழியிலேயே விடை பெறலாம்
மொபைல் போன் மூலம் ஆதார் அப்டேட் எப்படி செய்வது
* UIDAI பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில், ‘ஆதார் புதுப்பிப்புக்கு தொடரவும்’ என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.
* அதைக் கிளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
* பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள கேப்ட்சாவை தட்டச்சு செய்ய வேண்டும்.
* இப்போது உங்கள் மொபைல் போனில் நீங்கள் பெறும் ஒரு முறை கடவுச் சொல்லையை (OTP) அதில் பாஸ்சில் உள்ளிட வேண்டும்.
* பின்னர் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்களை அதில் உள்ளிடவும். அதன் அப்டேட் செய்ய வேண்டும்.
* நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் அடையாள ஆணையத்துடன் (UIDAI) பொருந்தினால், உங்களது மொபைல் போனுக்கு “வாழ்த்துக்கள்! மின்னஞ்சல் ஐடி எங்கள் பதிவுகளுடன் பொருந்துகிறது!” என்ற மெசேஜ் வரும்.
குறிப்பு: இது போன்று ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வதற்கு, நீங்கள் முதன் முதலாக ஆதார் எடுக்க பதிவு செய்த அலைபேசி எண் கண்டிப்பாக அவசியம். நீங்கள் அப்டேட் செய்வதற்கு தேவையான ஒரு முறை கடவுச் சொல் எண் (OTP) அந்த அலைபேசிக்கே வரும். அந்த எண் இல்லையென்றால் உங்களால் அப்டேட் செய்ய இயலாது.
ALSO READ | Aadhaar Card-ல் எத்தனை முறை உங்கள் பெயரை மாற்ற முடியும் தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR