ஆதார் கார்டுக்கான கட்டணங்கள் உயர்வு! புதிய கட்டண விவரம் இதோ!

குழந்தைகள் 5 மற்றும் 15 வயதை அடையும் போது அவர்களின் ​​பத்து விரல்கள், கருவிழி மற்றும் முக புகைப்படம் ஆகியவற்றின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும் என்று யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 26, 2022, 06:26 AM IST
  • ஆதாருக்கான கட்டணங்களை உயர்த்தியது அரசு.
  • நவம்பர் 1, 2022 முதல் புதிய கட்டணம் வசூலுக்கு வரும்.
  • யூஐடிஏஐ அதன் அதிகார்வப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆதார் கார்டுக்கான கட்டணங்கள் உயர்வு! புதிய கட்டண விவரம் இதோ! title=

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) பதிவாளர்கள்/பிற சேவை வழங்குநர்கள் வழங்கும் சேவைகள் மற்றும் ஆதார் உருவாக்கம் மற்றும் 5 முதல் 15 வரை உள்ளவர்களுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு போன்ற பல சேவைகளுக்காக வசூலிக்கும் தொகையை அதிகரித்து இருக்கிறது.  ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது, நவம்பர் 1, 2022 முதல் உள்ள பதிவாளர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தும்.  புதிதாகப் பிறந்தவர் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஆதார் அட்டை பெற பதிவு செய்யலாம்.  இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, '5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக்ஸ் எதுவும் எடுக்கப்பட போவதில்லை, அவர்களின் யூஐடி ஆனது அவர்களின் பெற்றோரின் யூஐடி உடன் இணைக்கப்பட்ட மக்கள்தொகை தகவல் மற்றும் முகப் புகைப்படத்தின் அடிப்படையில் செயலாக்கப்படும். 

இந்த குழந்தைகள் 5 மற்றும் 15 வயதை அடையும் போது அவர்களின் ​​பத்து விரல்கள், கருவிழி மற்றும் முக புகைப்படம் ஆகியவற்றின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும், இதற்கான அறிவிப்பு அவர்களின் உண்மையான ஆதார் கடிதத்தில் குறிப்பிடப்படும்.  இப்போது குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற ஆன்லைனில் எப்படி பதிவு செய்யலாம் என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் எச்சரிக்கை!

1) யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் பால் ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய வேண்டும்.

2) ஆதார் அட்டை பதிவுப் பக்கத்திற்குச் சென்று அதைக் கிளிக் செய்யவும்.

3) அதில் குழந்தையின் பெயர், பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்.

4) அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, இதர தேவையான தகவல்களையும் நிரப்ப வேண்டும் .

5) ஆதார் அட்டையை பதிவு செய்வதற்கான தேதியை நிர்ணயிக்க வேண்டிய நேரம் இது.

6) விண்ணப்பதாரர் அருகிலுள்ள பதிவு மையத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பதிவுசெய்யும் செயல்முறையைத் தொடரலாம்.

7) அருகில் உள்ள ஆதார் அட்டை பதிவு மையத்தைப் பார்வையிடவும்.

8) பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டையுடன் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

9)  பெற்றோரின் ஆதார் அட்டை தகவல் மற்றும் மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.

10) சரிபார்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து குழந்தையின் புகைப்படம் எடுக்கப்படும்.

மேலும் படிக்க | கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News