மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ அரியர் பற்றிய மெகா அப்டேட்

7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து இன்னும் எந்த விவாதமும் செய்யப்படவில்லை. இந்த விவகாரம் பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் விவாதிக்கப்படலாம் என்பதுதான் சமீபத்திய அப்டேட். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 31, 2024, 08:06 PM IST
  • 7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்
  • அகவிலைப்படி அரியர் தொகை: தீர்வு கிடைக்குமா?
  • DA Arrear வந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ அரியர் பற்றிய மெகா அப்டேட் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பு என்ற மிகப்பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுள்ளது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். மார்ச் மாதம் அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகின்றது. 

அகவிலைப்படி அரியர் தொகை

இதற்கிடையில் மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து இன்னும் எந்த விவாதமும் செய்யப்படவில்லை. இந்த விவகாரம் பட்ஜெட் கூட்டத்தொடரில் (Budget Session) மீண்டும் விவாதிக்கப்படலாம் என்பதுதான் சமீபத்திய அப்டேட். ஆனால், இந்த தொகையை மீண்டும் அளிப்பது பற்றிய செய்தியை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், இம்முறை இது தொடர்பாக நிதி அமைச்சருக்கு (Finance Minister) கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த புதிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பாரதிய பிரக்ஷா மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகேஷ் சிங், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (Nirmala Sitharaman)  சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். 'கொரோனா பெருந்தொற்றின் போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலைப்படி முடக்கப்பட்டது. இந்த முடக்கம் 2021 இல் நீக்கப்பட்டது. ஆனால், சுமார் 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகை (DA Arrears) வழங்கப்படவில்லை. அந்த தொகையை முடக்கியதன் மூலம் அரசு சுமார் ரூ.34,000 கோடியை மிச்சப்படுத்தியது. இப்போது அதை திரும்பப் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. கோவிட்-19 காலத்தில் ஊழியர்களின் பங்களிப்பையும் மனதில் கொள்ள வேண்டும்.' என அந்த திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Paytm Payments Bank -க்கு எதிராக ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை

தீர்வு கிடைக்குமா?

மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 2020 ஜனவரி முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்டது. இருப்பினும், இந்த முடக்கம் ஜூலை 2021 முதல் நீக்கப்பட்டது. ஆனால், முடக்கப்பட்ட காலத்திற்கான அரியர் தொகையை அரசு வழங்கவில்லை. அந்த 18 மாத டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பிரதமர் மோடியிடம் நிலுவைத் தொகை குறித்து முறையிட்டுள்ளனர். 

DA Arrear வந்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்?

மத்திய ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைத்தால் பெரும் பலன் கிடைக்கும். லெவல்-1 ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900 வரை) அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) கணக்கீடு செய்யப்பட்டால், நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கும்.

7th Pay Commission: பே-கிரேடின் படி எவ்வளவு பணம் கிடைக்கும்?

- குறைந்தபட்ச கிரேட் பே ரூ.1800 (நிலை-1 அடிப்படை ஊதிய அளவு 18000 முதல் 56900 வரை) உள்ள மத்திய பணியாளர்களுக்கு ரூ.4320 [{4% ரூ.18000} X 6] கிடைக்கும். 

- [{4 சதவீதம்}56900 இல் X6] உள்ளவர்கள் ரூ.13656 பெறுவார்கள். 

- குறைந்தபட்ச கிரேட் பே உள்ள மத்திய ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை ரூ. 3,240 [{3 சதவீதம் ரூ. 18,000}x6] DA நிலுவைத் தொகை கிடைக்கும். 

- [{3 சதவீதம் ரூபாய் 56,9003}x6] நபர்கள் ரூ.10,242 பெறுவார்கள். 

- ஜனவரி முதல் ஜூலை 2021 வரை நிலுவையில் உள்ள டிஏ ரூ.4,320 ஆக இருக்கும் [{4 சதவீதம் ரூ.18,000}x6]. 

- [{4 சதவீதம் ₹56,900}x6] ரூ.13,656 ஆக இருக்கும்.

டிஏ அரியர் தொகை ரூ.4320+3240+4320 கிடைக்கும்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மேட்ரிக்ஸின்படி ஒரு நபரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 என்றால், அவருக்கு ரூ.11,880 டிஏ அரியர் கிடைக்கும். இதில் ஜனவரி 2020க்கான ரூ.4320 + ஜூன் 2020க்கு ரூ.3240 + ஜனவரி 2021க்கான ரூ.4320 ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | EPS-95: ஓய்வூதியதாரர்களின் போராட்டம்....குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News