7th Pay Commission: டிஏ அதிகரிப்பைத் தொடர்ந்து இதுவும் உயரும், பம்பர் ஊதிய ஏற்றம்

7th Pay Commission: கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 29, 2022, 10:46 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரித்துள்ளது.
  • ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான பணவீக்கத்தின் சராசரியை அரசாங்கம் கணக்கிடுகிறது.
  • பிட்மெண்ட் ஃபாக்டர் ஊதியத்தை தீர்மானிக்கிறது.
7th Pay Commission: டிஏ அதிகரிப்பைத் தொடர்ந்து இதுவும் உயரும், பம்பர் ஊதிய ஏற்றம் title=

மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தி: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரித்துள்ளது. அவர்களுக்கு இப்போது 38 சதவீத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அரசு ஊழியர்களின் பிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி வருகிறது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தனது ஊழியர்களை வருத்தப்பட வைக்க விரும்பவில்லை. ஆகையால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த மாற்று வழிகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

பிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படக் கூடும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, பிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18000 ஆக உள்ளது. பிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய ஊழியர்களின் கோரிக்கையாக இருந்தது. இப்படி இருந்தால் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 ஆக இருந்திருக்கும். இப்போது பிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்காக உயர்த்த அரசு ஒப்புக்கொள்ளலாம் என்பதுதான் புதிய விஷயம். இருப்பினும், அடுத்த ஆண்டு பட்ஜெட்டுக்கு பிறகே இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு உயரக்கூடும்? 

பிட்மெண்ட் ஃபாக்டர் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கக்கூடும். ஒரு மத்திய ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000 என்று வைத்துக் கொள்வோம், பிறகு அலவன்ஸ்களை சேர்த்து சம்பளம் 18,000 X 2.57 = ரூ.46,260 ஆக இருக்கும். பரிந்துரைகளின் கீழ் இது அதிகபட்சமாகக் கருதப்பட்டால், சம்பளம் 3.68 மடங்கு 26000X3.68 = ரூ 95,680 ஆக இருக்கும். ஊழியர்களுக்கு இதில் பம்பர் பலன் கிடைக்கும். அதே சமயம், 3 மடங்கு பிட்மெண்ட் ஃபாக்டர் இருந்தால், சம்பளம் 21000X3 = ரூ.63,000 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக்குடன் ஊழியர்களுக்கு மற்றொரி குட் நியூஸ்

பிட்மெண்ட் ஃபாக்டர் ஊதியத்தை தீர்மானிக்கிறது

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் பிட்மெண்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அவர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் தவிர பிட்மெண்ட் ஃபாக்டர் மூலமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் மத்திய ஊழியர்களின் சம்பளத்தை இரண்டரை மடங்குக்கும் மேல் உயர்த்தும் காரணியாகும்.

பிட்மெண்ட் ஃபாக்டரின் முக்கியத்துவம் என்ன? 

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, பிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆகும். மத்திய ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் போது, ​​அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (டிஏ), பயணப்படி (டிஏ), வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ) ஆகியவை 7வது ஊதியக் குழுவின் பிட்மெண்ட் ஃபாக்டர் 2.57ஐப் பெருக்கி கணக்கிடப்படுகிறது. 

டிஏ 4 சதவீதம் அதிகரித்துள்ளது

ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான பணவீக்கத்தின் சராசரியை அரசாங்கம் கணக்கிடுகிறது. இதற்குப் பிறகு, பணவீக்க சராசரி இரண்டாவது பாதியில் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில், டிஏ அதிகரிப்பு முடிவு செய்யப்படுகிறது. அகவிலைபப்டி எப்போதும் சராசரி பணவீக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஜூலை 2022 வரையிலான காலகட்டத்திற்கு அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது.  

அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு, அதே அடிப்படையில் பயணப்படியும் அதிகரிக்கப்படுகிறது. DA இன் அதிகரிப்பு TA உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல், எச்ஆர்ஏ மற்றும் மெடிகல் ரீயெம்பர்ஸ்மெண்ட்டும் முடிவு செய்யப்படுகிறது. அனைத்து கொடுப்பனவுகளும் கணக்கிடப்பட்டு, ​​மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர CTC நிர்ணயிக்கப்படுகிறது.

பிஎஃப், கிராச்சுவிட்டியின் பங்களிப்பு

அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் இறுதி செய்யப்பட்ட பிறகு, மாதாந்திர வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் கிராஜுவிட்டியின் பங்களிப்பு வருகிறது. PF மற்றும் கிராஜுவிட்டி பங்களிப்பு அடிப்படை சம்பளம் மற்றும் DA உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு மத்திய ஊழியரின் பிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி, அதற்கான ஃபார்முலாவால் தீர்மானிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News