கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்பார்ப்புப்படி அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது, இம்முறை 4% அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்-தொழில்துறை தொழிலாளர்களின் தரவுகள் வெளிவந்த பிறகு, அகவிலைப்படியில் நல்ல உயர்வு இருக்கும் என்பது உறுதியானது. AICPI-IW முதல் பாதிக்கான தரவை வெளியிட்டது, இதில் குறியீடு 0.2 புள்ளிகள் அதிகரித்து 129.2 ஆக இருந்தது. அகவிலைப்படி 4% உயர்த்தப்படும்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் பலனைப் பெறுவார்கள்.
அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, இதற்கு முன்னர் ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது. இந்த அகவிலைப்படியானது இந்த ஆண்டு செப்டம்பர் மாத சம்பளத்தில் வழங்கப்படும், அதே நேரத்தில் உயர்த்தப்பட்ட டிஏ ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களின் கணக்கில் வந்து சேரும்.
மேலும் படிக்க | Dearness allowance: ஊழியர்களின் சம்பளத்தில் இவ்வளவு மாற்றங்களா?
முதல் பாதியின் புள்ளிவிவரங்களின் அடிப்படியில், ஜூன் மாதத் தரவைச் சேர்த்ததன் மூலம் குறியீடு இப்போது 129.2 ஐ எட்டியுள்ளது. மே மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு 129 புள்ளிகளாக இருந்தது. ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த முறை அகவிலைப்படியில் 4 சதவீத பலனைப் பெறுவார்கள். பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56,900 எனில் புதிய அகவிலைப்படி (38%) ரூ 21,622/மாதம் ஆகும், இதுவரை இருந்த அகவிலைப்படி (34%) ரூ 19,346/மாதம் எனில் தற்போது ரூ.2260/மாதம் அதிகரித்துள்ளது, இதன்மூலம் ஆண்டு ஊதிய உயர்வு ரூ.27,120 கிடைக்கும். குறைந்தபட்சமாக பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 18,000 எனில், புதிய அகவிலைப்படி (38%) ரூ.6840/மாதம் ஆகும், இதுவரை இருந்த அகவிலைப்படி (34%) ரூ.6120/மாதம் எனில் தற்போது அகவிலைப்படி ரூ.1080/மாதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆண்டு சம்பளமாக ரூ.8640 கிடைக்கும்.
மேலும் படிக்க | 8th pay commission: புதிய ஓய்வூதியக்குழு அமைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ