7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! ரூ.8000 வரை அதிகரிக்கும் சம்பளம்?

7th Pay Commission: 2024ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில், ஆண்டின் முதல் பாதியில் பல பெரிய மாற்றங்கள் இருக்கும்.   

Written by - RK Spark | Last Updated : Jan 23, 2024, 06:18 AM IST
  • இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்தால்.
  • அரசு அதில் முழு கவனம் செலுத்தும்.
  • அதிக தள்ளுபடிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு.
7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! ரூ.8000 வரை அதிகரிக்கும் சம்பளம்? title=

7th Pay Commission: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த முறை மத்திய அரசு வழங்க உள்ள கடைசி பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். 2024 பட்ஜெட்டில் பிட்மென்ட் காரணி குறித்தும் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சகத்தில் ஒப்புதல் கிடைத்ததும், இவை பட்ஜெட் செலவினத்தில் சேர்க்கப்படும்.  இந்த இடைக்கால பட்ஜெட் பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் சாதாரண மக்களின் கைகளுக்கு வரும் பணத்தை அதிகரிக்கும் என்று அனைவரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இந்த பட்ஜெட்டை பொது மக்களை தண்டி அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஃபிட்மென்ட் பேக்டரை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வருகின்றனர். அதற்கு இம்முறை தீர்வு வரும் என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க - செய்யும் எல்லா செலவுக்கும் கேஷ்பேக் வேண்டுமா? சிம்பிள் டெக்னிக் இதுதான்

இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட், தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் இடைக்கால மற்றும் கடைசி பட்ஜெட் ஆகும். இந்நிலையில், தேர்தலுக்கு முன் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை பரிசாக வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2024 பட்ஜெட்டில் பிட்மென்ட் காரணி குறித்தும் முடிவு எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தினால், அரசு ஊழியர்களின் சம்பளம் தானாக உயரும். அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை பொருத்தும் பிட்மென்ட் காரணி தீர்மானிக்கிறது. பிட்மென்ட் பேக்டர் தான் அடிப்படை சம்பளத்தின் அளவையும் தீர்மானிக்கப்படுகின்றன.

அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 6000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம், ஃபிட்மென்ட் காரணி கடந்த 2016 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. ஃபிட்மென்ட் காரணியில் அதிகரிப்பு ஏற்பட்டால் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரலாம். 
தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது, இது ரூ.26,000 ஆக உயரும். அதாவது, அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.8,000 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்ந்தால், அகவிலைப்படியும் உயரும். அகவிலைப்படி (DA) அடிப்படை சம்பளத்தில் 46 சதவீதத்திற்கு சமம். DA விகிதத்தை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம் DA கணக்கிடப்படுகிறது. அதாவது, அடிப்படை சம்பள உயர்வுடன், அகவிலைப்படியும் தானாகவே அதிகரிக்கும்.

ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் மத்திய ஊழியர்களுக்காவது 50 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. நவம்பர் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வந்துவிட்டன. டிசம்பர் எண்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதுவரை அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய DA விகிதம் 46 சதவீதமாக உள்ளது, AICPI தரவைப் பார்த்தால், அகவிலைப்படியின் மதிப்பெண் 49.68 சதவீதத்தை எட்டியுள்ளது. குறியீடு தற்போது 139.1 புள்ளிகளில் உள்ளது. அதே போல HRA- வீட்டு வாடகை கொடுப்பனவு வடிவத்தில் பெறப்படும். இதிலும் மறுசீரமைப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. HRA வில் அடுத்த திருத்த விகிதம் 3 சதவீதமாக இருக்கும். விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால் அது திருத்தப்படும். தற்போது HRA 27, 24, 18 சதவீதம் வழங்கப்படுகிறது. இது நகரங்களின் Z, Y, X வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50 சதவீதமாக இருந்தால், HRA 30, 27, 21 சதவீதமாக உயரும்.

மேலும் படிக்க - Credit Card Rules: கிரெடிட் கார்ட் விதிகளை மாற்றிய தனியார் வங்கிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News