எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக கட்சியின் சார்பில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்த்துள்ளனர்!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் அதிமுக கட்சியின் சார்பில் 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
AIADMK fields three candidates for #KarnatakaElections2018; Party's Karnataka state secretary MP Yuvaraj to contest from Gandhinagar, RP Vishnukumar from Hanur and M Anbu to contest from Kolar Gold Fields. pic.twitter.com/AapVh4PbO6
— ANI (@ANI) April 21, 2018
அதன்படி காந்திநகர் தொகுதியில் MP யுவராஜ், ஹன்னூர் தொகுதியில் RP விஷ்னுகுமார் மற்றும் கோலார் தங்க வயல் தொகுதியில் போட்டியிட M அன்பு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.